57 புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் தொடங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
57 புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் தொடங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
UPDATED : அக் 02, 2025 10:08 AM
ADDED : அக் 02, 2025 10:09 AM

புதுடெல்லி:
நாடு முழுவதும் 57 புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகளைத் தொடங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான மொத்த செலவு ரூ.5,862.55 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் ரூ.2,585.52 கோடி மூலதனச் செலவாகவும், ரூ.3,277.03 கோடி செயல்பாட்டுச் செலவாகவும் இருக்கும்.
இந்த பள்ளிகள் 2026-27 முதல் ஒன்பது ஆண்டுகளில் படிப்படியாக துவங்கப்படவுள்ளன. மேலும், தேசிய கல்விக் கொள்கை 2020-ன் கீழ், முதன்முறையாக இப்பள்ளிகளில் பால்வாடி (3 வயது தொடக்கக் கல்வி) வகுப்புகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
தற்போது, வெளிநாடுகளில் உள்ள 3 பள்ளிகள் உட்பட 1,288 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 13.62 லட்சம் மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். மாணவர்கள் அதிக அளவில் சேர விரும்பும் கல்வி நிறுவனமாக கேந்திரியா வித்யாலயா தொடர்ந்து திகழ்கிறது.