தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பல்கலை தேர்வு வினாத்தாள் அவுட் வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றம்

பல்கலை தேர்வு வினாத்தாள் அவுட் வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றம்

பல்கலை தேர்வு வினாத்தாள் அவுட் வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றம்


UPDATED : ஜூன் 05, 2025 12:00 AM

ADDED : ஜூன் 05, 2025 02:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 05, 2025 12:00 AM ADDED : ஜூன் 05, 2025 02:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருநெல்வேலி:
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் தேர்வு வினாத்தாள் அவுட் ஆன வழக்கை சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையின் கீழ் திருநெல்வேலி தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்ட கல்லூரிகள் செயல்படுகின்றன. மே 27ம் தேதி கல்லூரிகளில் பி.காம் மாணவர்களுக்கான இன்டஸ்ட்ரியல் லா தேர்வு நடந்தது. விடைத்தாள் கொடுத்து தேர்வு துவங்க இருந்த சில நிமிடங்களில் ஏற்கனவே வினாத்தாள் அவுட் ஆகிவிட்டதாக கூறி அனைத்து கல்லூரிகளிலும் தேர்வு ரத்து செய்யப்பட்டது. மாற்றுத்தேர்வு மே 30ல் நடத்தப்பட்டது.

தேர்வு வினாத்தாள் கசிந்தது குறித்து குற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பல்கலை பதிவாளர் சாக்ரடீஸ் போலீசில் புகார் அளித்தார்.

மே 27 காலை நடக்க இருந்த தேர்வு வினாத்தாள் பிரதியை அதற்கு முந்தைய தினம் 26ம் தேதி இரவில் பல்கலை தேர்வாணையர் பாலசுப்பிரமணியத்தின் வாட்ஸ்ஆப்க்கு யாரோ ஒரு நபர் அனுப்பி உள்ளார். எனவே இந்த முறைகேடு குறித்து பேட்டை போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த சம்பவம் திருநெல்வேலி, தூத்துக்குடி தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நடந்திருப்பதால், பேட்டை போலீசார் விசாரணை நடத்துவதில் சிரமம் உள்ளது. எனவே விசாரணையை சி.பி.சி.ஐ.டி., போலீசார் நடத்த போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹதிமணி பரிந்துரைத்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us