தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பி.எச்டி. விண்ணப்பிக்க பல்கலை அழைப்பு

பி.எச்டி. விண்ணப்பிக்க பல்கலை அழைப்பு

பி.எச்டி. விண்ணப்பிக்க பல்கலை அழைப்பு


UPDATED : அக் 13, 2025 08:16 AM

ADDED : அக் 13, 2025 08:17 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 13, 2025 08:16 AM ADDED : அக் 13, 2025 08:17 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை:
முழு நேரம் மற்றும் பகுதி நேரமாக, ஆராய்ச்சி படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என, பாரதியார் பல்கலை அறிவித்துள்ளது.

பாரதியார் பல்கலையின் பல்வேறு துறைகள், பல்கலையின் அங்கீகரிக்கப்பட்ட கல்லுாரிகள், ஆராய்ச்சி நிறுவனங்களில் முழு நேர, பகுதி நேர பி.எச்டி., படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.இப்படிப்புகளில் சேர பல்கலையின், www.b-u.ac.in என்ற இணைய தளம் மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

பி.எச்டி., ஆராய்ச்சி படிப்புக்கு ரூ.1,000, எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு ரூ.500 விண்ணப்பக் கட்டணமாக இணைய வழியில் செலுத்த வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பதிவாளர், பாரதியார் பல்கலை, கோவை என்ற முகவரிக்கு, 31ம் தேதி மாலை 5.30 மணிக்குள் சேரும் வகையில் அனுப்ப வேண்டும். பொது நுழைவுத்தேர்வு, நேர்காணல், அடிப்படையில் சேர்க்கை நடைபெறும் என, பல்கலை தெரிவித்துள்ளது. விவரங்களுக்கு, www.b-u.ac.in இணையதளத்தை பார்க்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us