பல்கலை துணைவேந்தருக்கு 'வாழ்நாள் சாதனையாளர் விருது'
பல்கலை துணைவேந்தருக்கு 'வாழ்நாள் சாதனையாளர் விருது'
UPDATED : நவ 03, 2025 07:32 AM
ADDED : நவ 03, 2025 07:32 AM
 புதுச்சேரி: 
புதுச்சேரி பல்கலைக் கழகத்தின் உயிர் தகவலியல் துறை மற்றும் மருந்து கண்டுபிடிப்பு சங்கம் சார்பில், புதுமையான மருந்து வடிவமைப்பு தொடர்பான உச்சி மாநாடு நடந்தது.
உயிர் தகவலியல் துறையின் தலைவர் கிருஷ்ணா வரவேற்றார். நரம்பியல் மற்றும் மருந்து கண்டு பிடிப்பு துறையில் கல்வி மற்றும் அறிவியல் தலைமை ஆராய்ச்சியில் செய்த சிறந்த பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் துணைவேந்தர் பிரகாஷ்பாபுக்கு 'வாழ்நாள் சாதனையாளர் விருது' வழங்கப்பட்டது.
பேராசிரியர் தினகரராவ் மற்றும் டாக்டர் அமவுடா உயிரியல் தகவலியல் துறையால் தொகுக்கப்பட்ட வழக்கமான சிகிச்சைகளுக்கு புற்றுநோய் எதிர்ப்பை சமாளிப்பதற்கான புதுமையான அணுகுமுறைகள்' என்ற புத்தகத்தை வெளியிட்டார்.
டில்லி ஐ.சி.ஜி.இ.பி., முன்னாள் இயக்குநர் தினகர் சலுங்கே, சஞ்சீவ் குமார் சிங் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அமைப்புச் செயலாளர் மோகனே கோமரின் நன்றி கூறினார்.

