UPDATED : ஜன 13, 2025 12:00 AM
ADDED : ஜன 13, 2025 10:04 AM
ஓமலுார்:
பெரியார் பல்கலையில் இன்று நடக்கும் பொங்கல் விழாவை புறக்கணிக்க, அதன் தொழிலாளர் சங்கத்தினனர் முடிவு செய்துள்-ளனர்.
இதுகுறித்து சேலம், பெரியார் பல்கலை தொழிலாளர் சங்க பொதுச்செயலர் சக்திவேல் அறிக்கை: ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட, முன்னாள் பொறுப்பு பதிவாளர் தங்கவேலுவை சஸ்பெண்ட் செய்யக்கோரிய, தமிழக அரசின் உத்தரவை அமல்படுத்தக்கோரி, அறவழியில் பல்கலை தொழிலாளர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.
அவர்களை பழிவாங்க, விசாரணை பெயரில் அச்சுறுத்தும், பல்-கலை நிர்வாக செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஜன., 13ல்(இன்று) பல்கலை நிர்வாகத்தால் நடத்தப்படும் பொங்கல் விழாவை புறக்கணிக்க, தொழிற்சங்கம் சார்பில் முடிவு செய்யப்-பட்டுள்ளது. இதுகுறித்த கடிதம், பல்கலை பொறுப்பு பதிவாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது.