தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/யு.பி.எஸ்.சி., தேர்வு பயிற்சி வீடியோ; இலவசமாக இணையத்தில் வெளியீடு

யு.பி.எஸ்.சி., தேர்வு பயிற்சி வீடியோ; இலவசமாக இணையத்தில் வெளியீடு

யு.பி.எஸ்.சி., தேர்வு பயிற்சி வீடியோ; இலவசமாக இணையத்தில் வெளியீடு


UPDATED : பிப் 08, 2026 07:44 PM

ADDED : பிப் 08, 2026 07:58 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 08, 2026 07:44 PM ADDED : பிப் 08, 2026 07:58 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
யு.பி.எஸ்.சி., போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள், வீட்டில் இருந்தே இலவசமாக பயிற்சி பெற, மனித நேய பயிற்சி மையம், பயிற்சி வீடியோ பதிவுகளை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து, மையத்தின் தலைவரும், சென்னை மாநகராட்சி முன்னாள் மேயருமான சைதை துரைசாமி வெளியிட்ட அறிக்கை:

இந்தியா முழுதும், அனைத்து தேர்வர்களும், வீட்டில் இருந்தபடியே, ஐ.ஏ.எஸ்., தேர்விற்கு பயிற்சி பெற வசதியாக, யு.பி.எஸ்.சி., முதல்நிலை தேர்வுக்கான பயிற்சி வீடியோக்கள், இலவசமாக தொலைக்காட்சி வாயிலாக, மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

தற்போது, அந்த வீடியோக்கள் அனைத்தும், mntfreeias.com என்ற இணையதளத்தில், இலவசமாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. மாணவர்கள் அந்த இணையதளத்தில், தங்கள் பெயரை பதிவு செய்து, வீடியோக்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களில் இருந்தும், பல தேர்வர்கள், இலவசமாக வீடியோ பாடங்களை பயின்று வருகின்றனர். இணையதளத்தில் 500க்கும் மேற்பட்ட வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

இவற்றில் சந்தேகம் இருந்தால், காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, மையத்தின் தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு, அவற்றுக்கு விடை அறியலாம். தொலைபேசி எண் உள்ளிட்ட விபரங்கள், இணையதளத்தில் இடம் பெற்றுள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us