யு.பி.எஸ்.சி., தேர்வு: சங்கர் ஐ.ஏ.எஸ்., அகாடமி மாணவர்கள் சாதனை!
யு.பி.எஸ்.சி., தேர்வு: சங்கர் ஐ.ஏ.எஸ்., அகாடமி மாணவர்கள் சாதனை!
UPDATED : நவ 07, 2026 10:44 AM
ADDED : நவ 07, 2026 10:44 AM
சென்னை:
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய 2026ம் ஆண்டுக்கான சிவில் சர்வீசஸ் முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் நாடு முழுவதும் மொத்தம் 2,526 தேர்வர்கள் நேர்முகத் தேர்வு சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் இருந்து சுமார் 168 பேர் இத்தேர்வில் வெற்றி பெற்று நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், அவர்களில் 117 பேர் தமிழக சங்கர் ஐ.ஏ.எஸ்., அகாடமியைச் சேர்ந்த மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகம், திருவனந்தபுரம், டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத், புவனேஸ்வர் மற்றும் ஆன்லைன் பயிற்சி உட்பட இந்நிறுவனத்தின் அனைத்துக் கிளைகளிலிருந்தும் ஒட்டுமொத்தமாக 486 மாணவர்கள் நேர்முகத் தேர்வுக்குத் தேர்வாகி சாதனை படைத்துள்ளனர்.
மூன்று கட்டங்களாக நடைபெறும் இத்தேர்வின் முதல் நிலையான முதல்நிலைத் தேர்வு கடந்த மே 24ம் தேதி நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் சுமார் 7 லட்சம் பேர் பங்கேற்ற நிலையில், 13,343 பேர் மட்டுமே முதன்மைத் தேர்வுக்குத் தகுதி பெற்றனர்.
தொடர்ந்து, தேர்வானவர்களுக்கான முதன்மைத் தேர்வுகள் கடந்த ஆகஸ்ட் 21 முதல் ஆகஸ்ட் 30 வரை நடத்தப்பட்டு தற்போது முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து, முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்ற தேர்வர்களுக்கான அடுத்த கட்டத் தேர்வு புதுதில்லியில் உள்ள யு.பி.எஸ்.சி., தலைமையகத்தில் நடைபெற உள்ளது. இதற்கான விரிவான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, நேர்முகத் தேர்வுக்குத் தகுதி பெற்றுள்ள அனைத்து மாணவர்களுக்கும் உதவும் வகையில், சங்கர் ஐ.ஏ.எஸ்., அகாடமி சார்பில் இலவச சிறப்பு ஆளுமைத் தேர்வு வழிகாட்டுதல் நிகழ்ச்சி மற்றும் மாதிரி நேர்முகத் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.
இந்நிகழ்ச்சியில் பணியிலுள்ள மற்றும் ஓய்வு பெற்ற மூத்த ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., அதிகாரிகள், புகழ்பெற்ற பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் மற்றும் துறைசார் வல்லுநர்கள் அடங்கிய குழுவினர் மாணவர்களை நேரில் சந்தித்து வழிகாட்ட உள்ளனர்.
அனைத்து மையங்களிலும் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் இப்பயிற்சி குறித்த கூடுதல் விவரங்களுக்கு 6379784702, 9003190030, 9444166435 ஆகிய எண்களிலோ அல்லது interview@shankarias.in என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
