தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/'எச்1பி ' விசா கட்டண விலக்கு அமெரிக்க அரசு விளக்கம்

'எச்1பி ' விசா கட்டண விலக்கு அமெரிக்க அரசு விளக்கம்

'எச்1பி ' விசா கட்டண விலக்கு அமெரிக்க அரசு விளக்கம்


UPDATED : அக் 22, 2025 08:33 AM

ADDED : அக் 22, 2025 08:35 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 22, 2025 08:33 AM ADDED : அக் 22, 2025 08:35 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நியூயார்க்:
'எச்-1பி' விசாவிற்கு புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமே அதற்கான கட்டணமாக, 88 லட்சம் ரூபாய் வசூலிக்கப்படும் என அமெரிக்க அரசு விளக்கம் அளித்துள்ளது.

உலகம் முழுதும் இருந்து திறமையான பணியாளர்களை தேர்வு செய்து அவர்களுக்கு பணி வழங்க, அமெரிக்க நிறுவனங்கள் எச்-1பி விசாவை பயன்படுத்தி வருகின்றன. இதை அதிகளவில் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா முன்னிலையில் உள்ளது.

விசா வழங்குவது உள்ளிட்ட குடியேற்ற கொள்கைகளை கடுமையாக்கியுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், சமீபத்தில் புதிய உத்தரவு பிறப்பித்தார். அதன்படி, எச்1பி விசாவுக்கான கட்டணத்தை, 2 லட்சம் ரூபாயில் இருந்து 88 லட்சம் ரூபாயாக உயர்த்திஉள்ளார்.

இந்த நிலையில், ஏற்கனவே எச்-1பி விசா வைத்திருப்போருக்கு இந்தக் கட்டண உயர்வு பொருந்தாது என்று அறிவிக்கப்பட்டது.

தற்போது, மாணவர் விசாக்கள், தொழில்முறை விசாக்கள் உள்ளிட்ட அமெரிக்க விசாக்களை வைத்திருப்போர், எச்1பி விசாவுக்கு விண்ணப்பிக்கும்போது, இந்த புதிய கட்டணத்தில் இருந்து விலக்கு அளிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us