UPDATED : மே 29, 2025 12:00 AM
ADDED : மே 29, 2025 03:29 PM

வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் டிரம்ப் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை அளிப்பதால், வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கான விசா கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
ஆண்டுதோறும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்க பல்கலைகளில் சேர்கின்றனர். இதில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்திய மாணவர்கள். இந்நிலையில், வெளிநாட்டு மாணவர்களுக்கான புதிய விசா நேர்காணல்களை நிறுத்தி வைக்கும் படி, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ உத்தரவிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கை, கடந்த ஆண்டு அமெரிக்க பல்கலைகளில் நடந்த பாலஸ்தீன ஆதரவு போராட்டங்களைத் தொடர்ந்து, மாணவர்கள் மீதான கடுமையான கட்டுப்பாடுகளின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது.
விசா கோரியுள்ள மாணவர்களின், பேஸ்புக், எக்ஸ், லிங்க்ட்இன், டிக்டாக் சமூகவலைதளங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளன. அதில் பயங்கரவாத ஆதரவு மற்றும் யூத எதிர்ப்பு பதிவுகள் காணப்பட்டால், அவர்களின் விசா மறுக்கப்படலாம்.

