UPDATED : ஜூலை 02, 2025 12:00 AM
ADDED : ஜூலை 02, 2025 08:56 PM

சுற்றுலா மற்றும் கலாச்சார பாரம்பரிய துறையில் உயர் தகுதியுடன் நிபுணர்களை உருவாக்கும் நோக்கில், உஸ்பெகிஸ்தானில் முதுநிலை பட்டப்படிப்பை படிக்க விரும்பும் இந்திய மாணவர்களுக்கு அந்நாட்டு அரசு உதவித்தொகை வழங்குகிறது.
சில்க் ரோடு இண்டர்நேஷனல் டூரிசம் அண்டு கல்ச்சுரல் ஹெரிடேஜ் பல்கலைக்கழகத்தில் 2025-26 கல்வியாண்டில், படிக்க தேர்வு செய்யப்படுபவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.
முதுநிலை பட்டப்படிப்புகள்:
* மேலாண்மை
* சுற்றுலா மற்றும் விருந்தோம்பல்
* தொல்லியல்
* கலை மற்றும் கட்டட நினைவுச்சின்னங்களை மறுசீரமைத்தல்
* அருங்காட்சியகம், வரலாற்று சிறப்புமிக்க பொருட்களை பாதுகாத்தல் மற்றும் மறுசீரமைத்தல்.
பயிற்று மொழி:
ஆங்கிலம்
தகுதிகள்:
* உரிய துறையில் இளநிலை பட்டப்படிப்பு
* ஐ.இ.எல்.டி.எஸ்., டோபல், சி.இ.எப்.ஆர்., போன்ற ஆங்கில மொழிப்புலமை தேர்வுகளில் ஏதேனும் ஒன்றில் தேவையான மதிப்பெண்
உதவித்தொகை விபரம்:
ஆண்டுக்கு ஒரு முறை உஸ்பெகிஸ்தான் சென்று வர விமானக் கட்டணம், மாதம் 600 அமெரிக்க டாலர் மற்றும் உஸ்பெகிஸ்தானில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை சென்றுவர 200 அமெரிக்க டாலர்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
ஆகஸ்ட் 1
விபரங்களுக்கு:
https://www.education.gov.in