UPDATED : செப் 14, 2024 12:00 AM
ADDED : செப் 14, 2024 11:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
மேல்நிலைப்பள்ளிகளில் பதவி உயர்வுக்கு தகுதி உடையோர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், 50 சதவீதம் பதவி உயர்வு வாயிலாக நிரப்பப்படுகின்றன. அதில், 2 சதவீதம், அந்த துறைகளில் அமைச்சு பணியாளர்களாக உள்ள, ஆசிரியர் தகுதி படிப்பை முடித்தோருக்கு வழங்கப்படுகிறது. பதவி உயர்வுக்கு விருப்பமும், தகுதியும் உள்ளோர், வரும் 24ம் தேதிக்குள், துறை இயக்குனரகத்துக்கு விபரங்களை அனுப்ப வேண்டும்.