தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நுாலகத்துறையில் காலியாகும் உயர் பணியிடங்கள்

நுாலகத்துறையில் காலியாகும் உயர் பணியிடங்கள்

நுாலகத்துறையில் காலியாகும் உயர் பணியிடங்கள்


UPDATED : ஜூலை 01, 2026 11:01 AM

ADDED : ஜூலை 01, 2026 11:04 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 01, 2026 11:01 AM ADDED : ஜூலை 01, 2026 11:04 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை:
பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் பொது நுாலகத்துறையில் துணை இயக்குநர் பணியிடம் மூன்று மாதங்களுக்கும் மேலாக காலியாக உள்ளது.

தற்போதைய இணை இயக்குநரும் ஜூலை இறுதியில்ஓய்வு பெறுவதால் இத்துறையின் முக்கிய பணியிடங்கள் அடுத்தடுத்து காலியாகி நிர்வாகம் முடங்கும் அபாயம் உள்ளது.

இத்துறையில் துணை இயக்குநர் பதவி மூலம் மாவட்ட நூலகங்களின் செயல்பாடுகள், புதிய திட்டங்கள், நிர்வாக உத்தரவுகள், நூல் கொள்முதல், பதவி உயர்வு, பணியாளர் நியமனம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன. துணை இயக்குநராக இருந்த தனலட்சுமி மார்ச் 15ல் இணை இயக்குநராக பதவிஉயர்வு பெற்றார். இப்பணியிடம் நிரப்பப் படவில்லை.

துணை இயக்குநர் பணியிடத்திற்கு சீனியாரிட்டி அடிப்படையில் மூத்த மாவட்ட நுாலக அலுவலர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.மூத்த மாவட்ட நூலக அலுவலர்கள் பலர் தகுதியுடன் விண்ணப்பித்தும் அரசு முடிவு எடுக்கவில்லை.

இத்துறை அலுவலர்கள் கூறியதாவது:
தமிழகத்தில் பொது நூலகங்களை நவீனப்படுத்தவும், போட்டித் தேர்வு மாணவர்களுக்கான சேவைகளை விரிவுபடுத்தவும் புதிய அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் உயர் நிர்வாகப்பதவியே காலியாக இருப்பது மாவட்ட நுாலகங்கள் தொடர்பான திட்டங்களை தாமதப்படுத்துகிறது.

தற்போதைய இணை இயக்குநரும் ஜூலை இறுதியில் ஓய்வு பெறவுள்ளதால், நுாலகத்துறையின் முக்கிய இரண்டு பணியிடங்கள் ஒரே நேரத்தில் காலியாகும் சூழல் உள்ளது என்றனர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us