UPDATED : செப் 03, 2026 06:31 PM
ADDED : செப் 03, 2026 06:32 PM
அ நிறம் | அளவு
கிருஷ்ணராயபுரம்:
கிருஷ்ணராயபுரம் வட்டார வள மையத்திற்கு உட்பட்ட மாணவ, மாணவியருக்கான, கலைத்திறன் போட்டி, லாலாப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது.
கிருஷ்ணராயபுரம் வட்டார அளவிலான, அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு நாட்டு புறப்பாடல், வில்லுப்பட்டு, கரக்காட்டம், ஒயிலாட்டம் என, கலைத்திறன் போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில் கிருஷ்ணராயபுரம் வட்டார வளமையத்திற்கு உட்பட்ட அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப் பள்ளி, மற்றும் உயுர்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
கிருஷ்ணராயபுரம் வட்டார வள மைய மேற்பார்வையாளர் சிவக்குமார், பொறுப்பாளர் நித்தியானந்தம் மற்றும் பயிற்சி ஆசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.
