தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வாசவி வித்யா அறக்கட்டளை புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு

வாசவி வித்யா அறக்கட்டளை புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு

வாசவி வித்யா அறக்கட்டளை புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு


UPDATED : ஏப் 07, 2026 11:05 AM

ADDED : ஏப் 07, 2026 11:06 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 07, 2026 11:05 AM ADDED : ஏப் 07, 2026 11:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்:
சேலம் வாசவி வித்யா அறக்கட்டளை சார்பில், வைஸ்யா கல்லுாரி, வைஸ்யா மேலாண் கல்லுாரி, வைஸ்யா கல்வியியல் கல்லுாரிகள் செயல்படுகின்றன. சமீபத்தில், அறக்கட்டளை பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது.

செயலர் ராஜேந்திரபிரசாத் தலைமை வகித்தார். இதில், புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி, அறக்கட்டளை தலைவராக கிருஷ்ணன், வைஸ்யா கல்லுாரி தலைவராக குமரேசன், அறக்கட்டளை மற்றும் கல்லுாரியின் செயலராக வெங்கட்ராமன், பொருளாளர் நடராஜன், துணைத் தலைவர்களாக ஆடிட்டர் நாராயணசாமி, பிரகாஷ், விஸ்வநாதன் ஆகியோர் பொறுப்பேற்று கொண்டனர்.

அதனை தொடர்ந்து, ஆசிரியர்கள், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. முன்னாள் செயலர் ராஜேந்திரபிரசாத் கலந்து கொண்டு, புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இனிவரும் கல்வியாண்டுகளில் கல்லுாரி நிர்வாகத்தையும், கற்றல் பணிகளையும் மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுப்பது என தீர்மானிக்கப்பட்டது.

முன்னாள் செயலர் ராஜேந்திரபிரசாத், அவரது கல்வி அனுபவங்களின் அடிப்படையில் வழிகாட்டல் உதவிகளை வழங்க வேண்டும் என, புதிய நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கேட்டு கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us