sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

வழிகாட்டி ஆடிட்டர் படிப்பு அளப்பரிய வாய்ப்பு

/

வழிகாட்டி ஆடிட்டர் படிப்பு அளப்பரிய வாய்ப்பு

வழிகாட்டி ஆடிட்டர் படிப்பு அளப்பரிய வாய்ப்பு

வழிகாட்டி ஆடிட்டர் படிப்பு அளப்பரிய வாய்ப்பு


UPDATED : ஏப் 02, 2024 12:00 AM

ADDED : ஏப் 02, 2024 07:30 PM

Google News

UPDATED : ஏப் 02, 2024 12:00 AM ADDED : ஏப் 02, 2024 07:30 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:
தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில் பேசிய தி இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்ஸ் ஆப் இந்தியா அமைப்பு நிர்வாகி ஆடிட்டர் செந்தில்குமார் பேசினார்.

அவர் பேசியதாவது:

சம்பாதிப்பதை காட்டிலும், சமுதாயத்தில் கவுரவமான வேலையில் இருக்க வேண்டும் என்றும் சிலர் நினைக்கலாம். அதற்கு ஏற்ப, கல்வியை தேர்வு செய்ய வேண்டும். இது அனைத்தும், ஆடிட்டர் என்ற, சார்ட்டர்டு அக்கவுன்டன்ட் பணியில் கிடைக்கும். அறிவியல், மருத்துவம், பொறியியல் என்பதை போல, சி.ஏ., படிக்கலாம்; இது தனி தொழில் சேவையாக மதிக்கப்படுகிறது. தொழிலில் லாபம் சம்பாதிக்க வேண்டும்; தொழிலில், லாபமா, நட்டமா, நட்டத்தை எப்படி குறைக்கலாம் என்பதற்கு, சி.ஏ., படிப்பு இன்றியமையாதது. தொழில் நிறுவனத்துக்கு, நிதிசார் அறிவுரைகளை வழங்கி, தொழிலை சிறப்பாக நடத்த, அரசுக்கும், மக்களுக்கும் இணைப்பு பாலமாக இருப்பவர்கள் ஆடிட்டர்கள். வருமான வரி, ஜி.எஸ்.டி., என, அனைத்துக்கும் ஆடிட்டர்கள் தேவை அவசியம்.

சி.ஏ., எங்கு படிக்கலாம்?

நம் நாட்டில், தி இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டர்டு அக்கவுன்டன்ட்ஸ் ஆப் இந்தியா (ஐ.சி.ஏ.ஐ.,) மூலம் மட்டுமே படிக்க முடியும். கடந்த, 1949ம் ஆண்டு முதல், ஆடிட்டர் பயிற்சி பெற்று வருகின்றனர்; நாட்டில், நான்கு லட்சம் ஆடிட்டர் இருக்கின்றனர். தேவையும், அதே அளவுக்கு உயர்ந்துள்ளது. உள்நாட்டில் மட்டுமல்ல; வெளிநாடுகளிலும் வேலைவாய்ப்பு இருக்கிறது. இணையதளத்தில் பார்த்து, சி.ஏ., படிக்க ஆலோசனை பெறலாம். நுழைவுத்தேர்வு அலைச்சல் இருக்காது. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 முடித்தவர்கள் பயிற்சி பெறலாம்.

இந்தியாவில், 168 கிளைகள் இருக்கின்றன; 50 நாடுகளில், சி.ஏ., பயிற்சி அளிக்கப்படுகிறது. பிளஸ் 2 முடித்தவர்கள் - 17 வயது முடித்திருந்தால் சேரலாம். கட் ஆப் தேவையில்லை. ஏதாவது ஒரு பட்டம் படித்தவரும், இரண்டாவது நிலைக்கு சேரலாம். கலைப்பிரிவு சார்ந்தவர் மட்டுமல்ல; அறிவியல் பாடம் படித்தவர்களும், பவுண்டேஷன் கோர்சில் சேரலாம். பட்டப்படிப்பு காமர்ஸ்படித்தவர், 55 சதவீதம் மார்க் இருந்தாலும், வணிகவியல் படிக்காத மாணவர்கள், 60 சதவீத மதிப்பெண் இருந்தாலும், நேரடியாக 2வது நிலை பயிற்சியில் இணையலாம்.
ஆரம்பகட்ட பயிற்சியில், நான்கு பாடப்பிரிவுகள் இருக்கும்; இன்டர்மீடியட் பிரிவில், ஆறு பாடப்பிரிவுகளும் இருக்கும். மற்ற படிப்புகளை போல், படித்துவிட்டு செயல் விளக்கம் இல்லை. ஆடிட்டர் படிப்பில், படிக்கும் முன்பாகவே, ஆடிட்டரிடம் இரண்டு ஆண்டு பயிற்சி அவசியம்.

கடின உழைப்பு, விடா முயற்சி

ஆறு மாதம் கழித்து, ஆறு பாடப்பிரிவுகளில் இறுதி தேர்வு நடக்கும். பத்தாம் வகுப்பு முடித்ததும் முன்பதிவு செய்து, பிளஸ் 2 முடித்ததும், சி.ஏ. படிக்கலாம். மொத்தம், மூன்றரை முதல் நான்கு ஆண்டுகளில் முழுமையான ஆடிட்டராக உயரலாம். 17 வயதில், முன்பதிவு செய்தால், 21 முடியும் போது, ஆடிட்டராக இருக்கலாம். ஆடிட்டருக்கு படிக்க, மூன்று பிரிவுகளுக்கும் சேர்த்து, 77,000 ரூபாய் மட்டுமே செலவாகும். பயிற்சி எடுக்கும் போதே, மாதம், 3,000 முதல், 4000 ரூபாய் வரை ஊக்கத்தொகையும் வழங்கப்படும்.
திருப்பூரில் மட்டும், 460 ஆடிட்டர்கள் உள்ளனர்; அவர்களில், 25 சதவீதம் பேர் பெண்கள். இத்துறையில், பெண்களுக்கு அதிக வாய்ப்பு உள்ளது. கடின உழைப்பை கொடுக்காமல் இருந்தால், எந்தவேலையும் கடினமாக தோன்றும். விடாமுயற்சியும் இருந்தால், சி.ஏ., என்ற உன்னத நிலையை அடையலாம்.

ஆடிட்டர் மகிமை

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், சி.ஏ., பற்றி குறிப்பிடுகையில், நாட்டை கட்டமைப்பதில் ஆடிட்டர் பங்கு இன்றியமையாதது என்றார். பிரதமர் மோடி பேசுகையில் , பிரதமரின் கையெழுத்தை காட்டிலும், ஆடிட்டர் போடும் கையெழுத்து மதிப்பு வாய்ந்தது என்று பாராட்டியுள்ளார். ஆடிட்டர் சான்றுகளை, அரசு அப்படியே ஏற்கும்.






      Dinamalar
      Follow us