UPDATED : ஜூலை 12, 2025 12:00 AM
ADDED : ஜூலை 12, 2025 09:41 AM
வெள்ளகோவில்:
மகாத்மா காந்தி நற்பணி மன்ற அறக்கட்டளை சார்பில், 6வது ஆண்டு வெள்ளகோவில் புத்தக திருவிழா துவங்கியது.
அறக்கட்டளை தலைவர் ராஜ்குமார், தலைமை வகித்தார். காங்கயம் சப்-கோர்ட் நீதிபதி, சந்தான கிருஷ்ணசாமி புத்தக கண்காட்சியை துவக்கி வைத்தார். வெள்ளகோவில் நகராட்சி கமிஷனர் மனோகரன், முன்னிலை வகித்து, புத்தக விற்பனையை துவக்கி வைத்தார். லயன்ஸ் கிளப் தலைவர் சவுந்தர்ராஜன், ரோட்டரி தலைவர் மோகன்ராஜ், ஞானசம்பந்தர் பள்ளி தாளாளர் பரிமளம், பேரூராட்சி முன்னாள் தலைவர் செல்வராஜ் ஆகியோர் பேசினர். புத்தக கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் ஆதி, நன்றி கூறினார்.
துவக்க நிகழ்ச்சியில், மாணவ, மாணவியர், பொதுமக்கள் மற்றும் மகாத்மா காந்தி நற்பணி மன்ற அறக்கட்டளையினர் என பலரும் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, வெள்ளகோவில் புத்தக திருவிழா ஒருங்கிணைப்பாளர் அருண்குமார், சம்பத்குமார் மற்றும் சந்தோஷ் ஆகியோர் செய்திருந்தனர்.