UPDATED : மார் 02, 2025 12:00 AM
ADDED : மார் 02, 2025 09:02 AM
பெங்களூரு:
விதான் சவுதாவில் நடக்கும் புத்தக மேளாவை பொது மக்கள் ஆர்வமுடன் பார்த்து ரசித்து வருகின்றனர்.
பெங்களூரு, விதான் சவுதாவில் புத்தக மேளா நடந்து வருகிறது. இது கடந்த மாதம் 27ம் துவங்கி வரும் நாளை வரை நடக்கிறது. இதில் 50க்கும் மேற்பட்ட புத்தக கடைகள் உள்ளன. இதில் கன்னட புத்தகங்களே பெரும்பாலான எண்ணிக்கையில் உள்ளன.
ஆங்காங்கே ஆங்கில புத்தகமும் விற்கப்படுகின்றன. தமிழகத்தில் இருந்து காலச்சுவடு பதிப்பகத்தின் சார்பில் புத்தக கடை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு உள்ள ஒரே ஒரு தமிழ் புத்தக கடை இது மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றைய தினம் கருத்தரங்கம், சிறிய அளவிலான நிகழ்ச்சிகள் விதான் சவுதா வளாகத்தில் நடந்தன. இதை மக்கள் விரும்பி ரசித்தனர். புத்தக மேளா விதான் சவுதாவில் நடப்பதால் பலரும் விதான் சவுதா உள்ளே சென்று புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர்.
வார இறுதி நாட்களான இன்றும், நாளையும் மக்கள் கூட்டம் அதிக எண்ணிக்கையில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. புத்தக கண்காட்சியை பார்ப்பதுடன் மட்டுமின்றி, சில புத்தகங்களை வாங்கி வருவது இன்னும் சிறப்பு.