விதையாய் நுழையும் குழந்தைகளை விருட்சமாக்கும் வித்யா விகாஸ் பள்ளி
விதையாய் நுழையும் குழந்தைகளை விருட்சமாக்கும் வித்யா விகாஸ் பள்ளி
UPDATED : அக் 13, 2026 09:33 PM
ADDED : அக் 13, 2026 09:34 PM
திருப்பூர்:
ஊத்துக்குளி ரோடு, குளத்துப்பாளையத்தில் இயங்கும் வித்யா விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், ஒவ்வொரு குழந்தையின் தனித்திறனையும் கண்டறிந்து, அவர்களின் அறிவு, ஆற்றல், தன்னம்பிக்கை மற்றும் ஒழுக்கத்தை வளர்க்கும் ஒரு சிறந்த கல்வி சூழலை உருவாக்கி வருகிறது.
தரமான கல்வி மற்றும் கருத்துபுரிதலுடன் கூடிய கற்றல் தான், எங்களது முதன்மையான நோக்கம். கற்றலை தாண்டி, மாணவர்களின் தனித்திறன் மற்றும் அறிவாற்றல் மேம்பாடு, ஆங்கில மொழிதிறன் மற்றும் தகவல் தொடர்பு திறன் வளர்ச்சி, ஒழுக்கம், பொறுப்புணர்வு, விளையாட்டு, கலை மற்றும் இணைப்பு பாட செயல்பாடுகள் வாயிலாக ஆளுமை வளர்ச்சி, உயர் கல்விக்கும், எதிர்கால சாதனைகளுக்கும் வழிகாட்டி வருகிறது.
இதற்கு வழிகாட்டிய தண்டபாணி மாஸ்டரின் அனைத்து விஷயத்தையும் பள்ளி தாளாளர் கனகரத்தினம் தண்டபாணி மற்றும் நிர்வாக அலுவலர் சிவகுருநாதன் ஆகியோரின் நேரடி கண்காணிப்பில் செயல்பட்டு வருகிறது.
வித்யா விகாஸ் பள்ளியில் விலாசமான வகுப்பறைகள், காற்றோட்டமான வளாகம், ஆயிரக்கணக்கான புத்தகங்கள் கொண்ட நுாலகம், அழகான ஆய்வு கூடம், அனுபவம் மிக்க ஆசிரியர்கள் என அனைத்து வகையில் தரமான கல்வியை வழங்கி வருகிறது. மேலும், ஆண்டுதோறும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொது தேர்வுகளில் இப்பள்ளி மாணவ, மாணவியர் சாதனைகளை தொடர்ந்து படைத்து வருகின்றனர்.
