UPDATED : அக் 11, 2024 12:00 AM
ADDED : அக் 11, 2024 11:31 AM

கோவை :
தினமலர் சார்பில் நாளை, ராம்நகரில் உள்ள ஐயப்பன் பூஜா சங்கத்தில், வித்யாரம்பம் நிகழ்ச்சி நடக்கிறது.
விஜயதசமியன்று, குழந்தைகள் கல்விச்சாலைக்குள் அடியெடுத்து வைத்தால், சரஸ்வதிதேவியின் அருள் முழுமையாக கிடைக்கும். அதற்காகவே தினமலர் சார்பில், ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமியன்று வித்யாரம்பம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
இந்தாண்டு, தினமலர் மாணவர் பதிப்பான பட்டம் மற்றும் எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனங்கள் சார்பில், அனா... ஆவன்னா அரிச்சுவடி ஆரம்பம்' என்ற பெயரில், சத்தியமூர்த்தி ரோட்டில் உள்ள ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கத்தில் காலை, 7:35 முதல் 10:00 மணி வரை, வித்யாரம்பம் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் பங்கேற்க, அனுமதி இலவசம். பங்கேற்க விரும்புவோர், குழந்தையின் பெயர், பெற்றோர் பெயர், முழு முகவரி, மொபைல் போன் எண் ஆகியவற்றை, 81226 91223 என்ற எண்ணில், காலை 10:00 முதல் மாலை, 5:00 மணிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும்.