தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தார் விஜய்!

10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தார் விஜய்!

10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தார் விஜய்!


UPDATED : ஜூன் 05, 2025 12:00 AM

ADDED : ஜூன் 05, 2025 08:45 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 05, 2025 12:00 AM ADDED : ஜூன் 05, 2025 08:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
10, 12ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை நேரில் அழைத்து, த.வெ.க., தலைவர் விஜய் விருது வழங்கி கவுரவித்தார்.

10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, த.வெ.க., சார்பில் விருது வழங்கும் விழா ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. சட்டசபை தொகுதிவாரியாக மாணவர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு விருது மற்றும் விருந்தளித்து, விஜய் வாழ்த்தி வருகிறார்.

முதற்கட்டமாக, 80 தொகுதிகளுக்கான மாணவர்களுக்கு, மே 30ம் தேதி, மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இரண்டாம் கட்டமாக இன்று (ஜூன் 04) ராமநாதபுரம், ஈரோடு, கரூர், தஞ்சாவூர், தர்மபுரி, திருச்சி, திருநெல்வேலி, திருப்பத்துார், திருப்பூர், திருவாரூர், தென்காசி, மயிலாடுதுறை, விருதுநகர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தார்.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வீடு மற்றும் கட்சி அலுவலகம், சென்னை கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டி அமைந்துள்ளது. இதனால், தன் பாதுகாப்பு கருதி, கட்சி நிகழ்ச்சிகளை எல்லாம் அங்கேயே அவர் நடத்தி வருகிறார் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us