இந்தியா - ரஷ்யா இடையே விசா இல்லா பயணம்: இந்தாண்டு இறுதியில் ஒப்பந்தம்
இந்தியா - ரஷ்யா இடையே விசா இல்லா பயணம்: இந்தாண்டு இறுதியில் ஒப்பந்தம்
UPDATED : மே 18, 2024 12:00 AM
ADDED : மே 18, 2024 06:53 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:
இந்தியா - ரஷ்யா இடையே விசா இல்லாமல் பயணம் மேற்கொள்வதற்கான ஒப்பந்தம் இந்தாண்டு இறுதியில் மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து ரஷ்ய அமைச்சர் கொன்றாட்யேவ் கூறியது:
இந்தியா -ரஷ்யா இடையே பயணத்தை எளிதாக்க இரு நாடுகளிடையே விசா இல்லாமல் பயணம் மேற்கொள்வது குறித்த ஆலோசனை கூட்டம் வரும் ஜூன் மாதம் நடக்கிறது. இதற்கான நடவடிக்கைகளுக்கு பின் ஒப்பந்தம் இந்தாண்டு இறுதிக்குள் இறுதி செய்யப்படும். இந்த ஒப்பந்தம் மூலம் இரு நாடுகிடையே சுற்றுலா உறவுகள் வலுப்படும். இவ்வாறு அவர் கூறினார்.