தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வி.ஐ.டி., பல்கலை நுழைவுத்தேர்வு விண்ணப்ப பதிவு

வி.ஐ.டி., பல்கலை நுழைவுத்தேர்வு விண்ணப்ப பதிவு

வி.ஐ.டி., பல்கலை நுழைவுத்தேர்வு விண்ணப்ப பதிவு


UPDATED : அக் 23, 2026 02:55 PM

ADDED : அக் 23, 2026 02:57 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 23, 2026 02:55 PM ADDED : அக் 23, 2026 02:57 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
வி.ஐ.டி., பல்கலையில், 2027ம் கல்வியாண்டுக்கான பி.டெக்., மாணவர் சேர்க்கை நுழைவுத் தேர்வு விண்ணப்ப பதிவு தொடங்கி உள்ளது.

இது குறித்து, வி.ஐ.டி., வேந்தர் கோ.விஸ்வநாதன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:


வி.ஐ.டி., பல்கலையின் வேலுார், சென்னை, அமராவதி, போபால் வளாகங்களில், 2027ம் கல்வியாண்டுக்கான பி.டெக்., இன்ஜினியரிங் பட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை நுழைவுத் தேர்வு, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு தொடங்கி உள்ளது.

மாணவர்கள், https://viteee.vit.ac.in என்ற, இணையதளம் வழியே, அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். நுழைவுத் தேர்வு ஒரே கட்டமாக, அடுத்த ஆண்டு ஏப்., 28ம் தேதி முதல் மே 2ம் தேதி வரை நடக்கும். இந்தியாவில் 133 நகரங்கள், வெளிநாடுகளில் 9 தேர்வு மையங்களில் தேர்வு நடத்தப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us