கியூ.எஸ்., தரவரிசை பட்டியலில் வி.ஐ.டி., பல்கலை 396வது இடம்
கியூ.எஸ்., தரவரிசை பட்டியலில் வி.ஐ.டி., பல்கலை 396வது இடம்
UPDATED : டிச 24, 2024 12:00 AM
ADDED : டிச 24, 2024 10:40 AM

சென்னை :
உயர் கல்வி நிறுவனங்கள் தொடர்பாக, லண்டனில் உள்ள, குவாக்கரெல்லி சைமண்ட்ஸ்' எனப்படும், கியூ.எஸ்., அமைப்பு ஆய்வு செய்து, ஆண்டுதோறும் தர வரிசை பட்டியல் வெளியிடுகிறது.
இதில், ஆசியா, ஐரோப்பா, ஆப்ரிக்கா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் செயல்படும் உயர் கல்வி நிறுவனங்கள் இடம் பெற்று வருகின்றன.
சமீபத்தில், இந்த ஆண்டுக்கான தர வரிசை பட்டியலை, கியூ.எஸ்., அமைப்பு வெளியிட்டது. இப்பட்டியலில், 1,744 பல்கலைகள் இடம் பெற்றுள்ளன. அதில், வி.ஐ.டி., பல்கலை, 396வது இடத்தை பிடித்துள்ளது.
உலக அளவில் கடந்த ஆண்டை விட, 53 இடங்கள் முன்னேறியுள்ளது. இந்திய அளவில், வி.ஐ.டி., பல்கலை, எட்டாவது இடத்தை பிடித்து சாதனை புரிந்துள்ளது.
கியூ.எஸ்., அமைப்பு, உலக அளவில் நிலையான தன்மை என்ற பிரிவில், சுற்றுச்சூழல், சமுதாய தாக்கம் மற்றும் நிர்வாகம் என்ற அடிப்படையில், ஆய்வு நடத்தி பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்திய அளவில் டில்லி ஐ.ஐ.டி., உலக அளவில், கனடாவில் உள்ள டொரன்டோ பல்கலையும் முதலிடம் பெற்றுள்ளன.