UPDATED : ஜூன் 10, 2024 12:00 AM
ADDED : ஜூன் 10, 2024 06:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை:
மதுரை வேளாண் கல்லுாரி வளாகத்தில் உள்ள மதுரை சமுதாய அறிவியல் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் உணவு மற்றும் சத்தியியல் 4ம் ஆண்டு மாணவர்களின் தொழிலகப் பயிற்சி கண்காட்சி நடந்தது.
இம்மாணவர்கள் தங்கள் திறனை வெளிப்படுத்தும்விதமாக தொழிலக மாதிரிகளை கல்லுாரியில் கண்காட்சியாக வடிவமைத்தனர். கனடா செஸ் கெட்சுவான் பல்கலை ரசாயனம் மற்றும் உயிர் வேதியியல் பொறியியல் துறை பேராசிரியர் வெங்கடேஷ் மேடா கண்காட்சியை துவக்கி வைத்தார். டீன் காஞ்சனா, பேராசிரியர்கள் பரிமளா, அமுதா, புஷ்பா, சரவணகுமார், விஜயலட்சுமி பங்கேற்றனர். பேராசிரியர் சசிதேவி, ஒருங்கிணைப்பாளர் கீதா ஏற்பாடுகளை செய்தனர்.