UPDATED : அக் 17, 2025 07:35 AM
ADDED : அக் 17, 2025 07:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
அரசு போக்குவரத்து கழகங்களில், இந்த நிதி ஆண்டில் தொழிற்பயிற்சி அளிக்க, 1,019 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவர்களுக்கு மாதம்தோறும், 9,000 ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்பட உள்ளது.
ஐ.டி.ஐ., டிப்ளமா, இன்ஜினியரிங் பட்டதாரி மாணவர்களை தேர்வு செய்து, அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் ஆண்டுதோறும் தொழிற்பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த நிதி ஆண்டில், 1,019 மாணவர்களை தேர்வு செய்து, தொழிற்பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
ஓராண்டு பயிற்சி காலத்தின்போது இன்ஜி., பிரிவினருக்கு, 9,000 ரூபாய், டிப்ளமா பிரிவுக்கு மாதம்தோறும் 8,000 ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படும். மேலும் தகவல் பெற, https://nats.education.gov.in என்ற இணையதளத்தை பார்க்கலாம். நாளை மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.