UPDATED : செப் 18, 2024 12:00 AM
ADDED : செப் 18, 2024 09:09 AM
சென்னை:
ஐ.டி.ஐ., படித்த மாணவர்களுக்கு, தொழில் பழகுனர் பயிற்சியில் சேர, மாநகர போக்குவரத்துக் கழகம் அழைப்பு விடுத்துள்ளது.
இது குறித்து, மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மாநகர போக்குவரத்து கழகத்தில் தொழில் பழகுனர்கள் பயிற்சிக்கு ஐ.டி.ஐ., படித்தவர்கள் தேவைப்படுகின்றனர்.
அதன் அடிப்படையில், மெக்கானிக் டீசல், எலக்ட்ரீஷியன், ஆட்டோ எலக்ட்ரீஷியன், வெல்டர், பிட்டர், டன்னர், பெயின்டர் உள்ளிட்ட பிரிவுகளில் 500 காலியிடங்களுக்கு 14,000 ரூபாய் மாத உதவித்தொகையில் ஓராண்டு காலம் தொழில் பழகுனர் பயிற்சி வழங்கப்படுகிறது.
வரும் 29ம் தேதி காலை 10:00 மணிக்கு, குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்துக் கழக தொழிற்பயிற்சி பள்ளியில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதில், தகுதியுள்ள மாணவர்கள் பங்கேற்று பயன் பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.