கேசவ் வித்யா மந்திர் பள்ளியில் மாணவர்களுக்கு வரவேற்பு
கேசவ் வித்யா மந்திர் பள்ளியில் மாணவர்களுக்கு வரவேற்பு
UPDATED : ஜூன் 06, 2026 10:42 AM
ADDED : ஜூன் 06, 2026 10:45 AM
அ நிறம் | அளவு
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி கேசவ் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், 2025-26 கல்வியாண்டு துவங்கப்பட்டது. பள்ளி முதல் நாளில், மாணவர்களை பள்ளியின் தாளாளர் மாரிமுத்து, செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் முதல்வர் பிரகாஷ் ஆகியோர் வரவேற்றனர்.
மாணவர்களை உற்சாகப்படுத்தும் வகையில், பள்ளி இசை குழு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் அனைவரும், மாணவர்களை இந்த கல்வியாண்டில் சிறந்த கல்வி முன்னேற்றத்தை அடைய வாழ்த்தினர்.
