செயற்கை நுண்ணறிவுக்கு ஏற்ப நம்மை தயார்படுத்த வேண்டும்
செயற்கை நுண்ணறிவுக்கு ஏற்ப நம்மை தயார்படுத்த வேண்டும்
UPDATED : மே 14, 2024 12:00 AM
ADDED : மே 14, 2024 01:12 PM

கோவை:
கோவை அவிநாசி ரோட்டில் உள்ள, இந்திய தொழில் வர்த்தக சபை சார்பில் ,வர்த்தகம் மற்றும் தொழில் துறை முன்னாள் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபுவுடன், சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது அவர் பேசியதாவது:
மொத்த உள்நாட்டு உற்பத்தி ஏன் அதிகரிக்கவில்லை, அதை எவ்வாறு அடைவது என்பதை அறிந்து நாம் செயல்பட வேண்டும். மாவட்ட அளவிலான வளர்ச்சியை கருத்தில் கொண்டு செயல்படுங்கள். ஒவ்வொரு வருடமும் வெயிலின் தாக்கம், அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இது தொழிற்சாலைகளுக்கு ஒரு சவாலான விஷயமாக உள்ளது. இதை மனதில் கொண்டு, சிறந்த பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும்.
புதிய தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு, நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். செயற்கை நுண்ணறிவு என்பது இந்தியா மட்டும் அல்லாமல், வெளிநாடுகளிலும் பெரிய தாக்கத்தை உருவாக்கி வருகிறது.
அதற்கும், நம்மை தயார் படுத்திக்கொள்ள வேண்டும். அரசும் அதற்கு ஏற்றார் போல, நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த பாடுபட வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்
முன்னதாக, இந்திய தொழில் வர்த்தக சபையின் தலைவர் ஸ்ரீராமுலு வரவேற்றார். செயலாளர் அண்ணாமலை நன்றி உரையாற்றினார்.