அரசு உதவி பெறும் பள்ளிகளில் கணினி ஆய்வகம் என்னாச்சு?
அரசு உதவி பெறும் பள்ளிகளில் கணினி ஆய்வகம் என்னாச்சு?
UPDATED : ஆக 12, 2025 12:00 AM
ADDED : ஆக 12, 2025 08:59 AM

சென்னை:
அரசு உதவி பெறும் பள்ளிகளில், கணினி ஆய்வகங்கள் அமைக்கப்படும் என்ற பள்ளிக்கல்வி துறையின் அறிவிப்பு என்னாச்சு என, ஆசிரியர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும், கணினி ஆய்வகங்கள் அமைக்க அரசு திட்டமிட்டது. 2,996 நடுநிலை, 540 உயர்நிலைப் பள்ளிகளில், 175 கோடி ரூபாய் மதிப்பில் ஆய்வகங்கள் அமைக்கும் பணி ஓரளவு நிறைவடைந்துள்ளது.
கணினி ஆய்வகங்கள் அமைக்கப்பட்டாலும், மாணவ - மாணவியரின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதில் பல சிக்கல்கள் நிலவுகின்றன. முக்கியமாக, ஆய்வகங்களை கையாள வும், மாணவ - மாணவி யருக்கு கற்பிக்கவும், போதிய பயிற்றுநர்கள் நியமிக்கப்படவில்லை என ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரி யர்கள் கூறுகையில், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ - மாணவியரை போலவே, எங்கள் பள்ளிகளிலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ - மாணவியர் அதிக எண்ணிக்கையில் படிக்கின்றனர்.
எங்கள் பள்ளிகளின் மாணவ - மாணவியருக்கும் அரசின் அனைத்து திட்டங்களும் கிடைக்க வேண்டும். கடந்த ஆண்டு, அரசு உதவி பெறும் பள்ளிகளிலும், 42 கோடி ரூபாயில் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது; இதுவரை நடவடிக்கை இல்லை என்றனர்.