sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 11, 2025 ,கார்த்திகை 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

இந்த ஆண்டில் உலகம் முழுதும் மக்கள் அதிகம் தேடிய செய்திகள் எவை?

/

இந்த ஆண்டில் உலகம் முழுதும் மக்கள் அதிகம் தேடிய செய்திகள் எவை?

இந்த ஆண்டில் உலகம் முழுதும் மக்கள் அதிகம் தேடிய செய்திகள் எவை?

இந்த ஆண்டில் உலகம் முழுதும் மக்கள் அதிகம் தேடிய செய்திகள் எவை?


UPDATED : டிச 11, 2025 09:59 AM

ADDED : டிச 11, 2025 10:01 AM

Google News

UPDATED : டிச 11, 2025 09:59 AM ADDED : டிச 11, 2025 10:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நியூயார்க்:
நடப்பாண்டில், உலகம் முழுதும் மக்கள் அதிகம் தேடிய, 10 செய்திகளின் பட்டியலை, பிரபல தேடுபொறி நிறுவனமான, 'கூகுள்' வெளியிட்டுள்ளது.

அதன் தொகுப்பு:

1.சார்லி கிர்க் கொலை
டொனால்டு டிரம்பின் தீவிர ஆதரவாளரான சார்லி கிர்க், கடந்த செப்டம்பரில் மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் உள்ள பல்கலையில் நடந்த நிகழ்ச்சி யில் உரையாற்றிய அவரை, டைலர் ஜேம்ஸ் என்ற இளைஞர் சுட்டுக் கொன்றார்.
2.இஸ்ரேல் - ஈரான் போர்
கடந்த ஜூனில், 'ரைசிங் லயன்' என்ற பெயரில் ஈரானின் அணு மற்றும் ஏவுகணை தளங்கள் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதலை நடத்தியது. இதையடுத்து, இஸ்ரேல் ராணுவ நிலைகள் மீது பெரிய ஏவுகணை தாக்குதல் களுடன் ஈரான் பதிலடி கொடுத்தது.
3.அமெரிக்க அரசு முடக்கம்


பட்ஜெட் மசோதா தொடர்பாக எதிர்க்கட்சியினர் உடனான கருத்து வேறுபாட்டால், அமெரிக்க அரசு வரலாற்றிலேயே 43 நாட்கள் அரசு நிர்வா கம் முடக்கப்பட்டது. நிதி இல்லாததுடன், ஊழியர் பற்றாக் குறையும் ஏற்பட்டதால் சேவைகள் பாதிக்கப்பட்டன.

4.புதிய போப்

கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் மத தலைவரான போப் பிரான்சிஸ், கடந்த ஏப்ரல் மாதம் காலமானார். இதையடுத்து, புதிய போப்பை தேர்வு செய்வதற் கான கார்டினல்கள் கூட்டத்தில், 267வது போப் ஆக வட அமெரிக் காவைச் சேர்ந்த ராபர்ட் பிரான்சிஸ் பிரிவோஸ்ட் தேர்வு செய்யப்பட்டார்.

5.லாஸ் ஏஞ்சல்ஸ் தீ விபத்து

ஜனவரியில், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மிகப்பெரிய காட்டுத்தீ பரவியது. இதனால் 57,000 ஏக்கர் வனப்பகுதி சாம்பல் ஆனது. 400க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் பதிவாகின: 4.25 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டது.

6.'மெலீசா' சூறாவளி


வட அமெரிக்க நாடான ஜமைக்காவை மெலீசா சூறாவளி புரட்டி போட்டது. கடந்த 174 ஆண்டுகளில் உருவான புயல்களிலேயே மிகவும் அபாயகரமான அதி தீவிர புயலான இது. ஜமைக்காவை உருக்குலைத்தது.

இது தவிர, அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயர் தேர்தலில், ஜனநாயக கட்சி வேட்பாளரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான ஜோஹ்ரான் மம்தானி வெற்றி பெற்றது உட்பட பல்வேறு செய்திகளை உலகம் முழுதும் மக்கள் அதிகம் தேடி உள்ளனர்.






      Dinamalar
      Follow us