UPDATED : ஜூலை 24, 2025 12:00 AM
ADDED : ஜூலை 24, 2025 07:22 AM
மதுரை :
கல்வித்துறையில் ஆசிரியர்களுக்கு பொதுமாறுதல் கலந்தாய்வு முடிந்த நிலையில், மதுரை மாநகராட்சி ஆசிரியர்களுக்கு எப்போது நடத்தப்படும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நடப்பு கல்வியாண்டில் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வை பள்ளிக் கல்வி முடித்துள்ள நிலையில், தொடக்க கல்வி ஆசிரியர்களுக்கும் தற்போது முடியும் நிலையில் உள்ளது. ஆனால் மாநகராட்சி ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வுக்கான ஆரம்ப கட்ட பணிகள் கூட இதுவரை தொடங்கவில்லை.
ஆண்டுதோறும் கல்வித்துறைக்கு அடுத்து மாநகராட்சிகளில் நடப்பது வழக்கம். ஆனால் இந்தாண்டு இன்னும் அறிவிப்பு கூட வெளியாகவில்லை. எனவே மாநகராட்சி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வை விரைவில் நடத்த கமிஷனர் சித்ரா நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.