UPDATED : ஜூன் 25, 2025 12:00 AM
ADDED : ஜூன் 25, 2025 08:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:
பிளஸ் 2 தேர்வு முடிவு மே, 8ல் வெளியாகியது. மாணவ, மாணவியர் கல்லுாரியில் இணைய வசதியாக, மே, 12ம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வினியோகிக்கப்பட்டது.
அரசுக் கல்லுாரிகளில் ஜூன் முதல் வாரம் கவுன்சிலிங் துவங்கியது. சிறப்பு, பொதுப்பிரிவு கவுன்சிலிங் நிறைவு பெற்று, கல்லுாரிகளில் மாணவ, மாணவியர் இணைந்துள்ளனர். வரும், 30ம் தேதி வகுப்புகள் துவங்குமென அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கல்லுாரியில் இணைவது எதிர்காலம் ஒளிமயமாவதன் அச்சாரமாக விளங்குகிறது என எதிர்பார்க்கும் மாணவர்கள், கல்லுாரி வகுப்புகள் துவங்க, ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில் பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ் எப்போது வினியோகிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு பெற்றோர், மாணவ, மாணவியர் மத்தியில் எழுந்துள்ளது.