தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பேராசிரியர்கள் பணியிடமாறுதல் கலந்தாய்வு எப்போது?

பேராசிரியர்கள் பணியிடமாறுதல் கலந்தாய்வு எப்போது?

பேராசிரியர்கள் பணியிடமாறுதல் கலந்தாய்வு எப்போது?


UPDATED : டிச 01, 2025 07:46 AM

ADDED : டிச 01, 2025 07:47 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 01, 2025 07:46 AM ADDED : டிச 01, 2025 07:47 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
'அரசு கல்லுாரி பேராசிரியர் பணியிடமாறுதல் கலந்தாய்வு அரசாணையை, உடனடியாக வெளியிட வேண்டும்' என, பேராசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்து உள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு அரசு கல்லுாரி ஆசிரியர் கழகம் பொதுச்செயலர் சுரேஷ் அறிக்கை:



தமிழகத்தில் செயல்பட்டு வரும், அரசு கலை அறிவியல், கல்வியியல் கல்லுாரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கு, ஆண்டுதோறும் பணியிடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படுவது வழக்கம்.

கடந்த ஆண்டு, பேராசிரியர்களுக்கான பணியிடமாறுதல் கலந்தாய்வு, நவம்பர் மாதமே நடந்தது. அதன்படி, நடப்பாண்டும் இடமாறுதல் கலந்தாய்வு நடத்த, உயர் கல்வித் துறைக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்தோம். நவம்பர் மாதம் கலந்தாய்வு நடத்தப்படும் என, உறுதி அளித்தனர்.

ஆனால், இதுவரை இடமாறுதல் கலந்தாய்வுக்கான அரசாணை வெளியிடப்படவில்லை. இனியும் காலம் தாழ்த்தாமல், கலந்தாய்வுக்கான அரசாணையை வெளியிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us