sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

அனைத்து படிப்புகளிலும் 10 சதவீத இட ஒதுக்கீடு எப்போது: கேபினட்டில் வைத்து முடிவெடுக்கப்படுமா

/

அனைத்து படிப்புகளிலும் 10 சதவீத இட ஒதுக்கீடு எப்போது: கேபினட்டில் வைத்து முடிவெடுக்கப்படுமா

அனைத்து படிப்புகளிலும் 10 சதவீத இட ஒதுக்கீடு எப்போது: கேபினட்டில் வைத்து முடிவெடுக்கப்படுமா

அனைத்து படிப்புகளிலும் 10 சதவீத இட ஒதுக்கீடு எப்போது: கேபினட்டில் வைத்து முடிவெடுக்கப்படுமா


UPDATED : ஜூன் 18, 2025 12:00 AM

ADDED : ஜூன் 18, 2025 08:27 AM

Google News

UPDATED : ஜூன் 18, 2025 12:00 AM ADDED : ஜூன் 18, 2025 08:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி:
அரசு பள்ளி மாணவர்களுக்கு அனைத்து படிப்புகளிலும் 10 சதவீத இட ஒதுக்கீடுவழங்கும் விவகாரத்தில் விரைவாக அரசு கொள்கை முடிவெடுக்க வேண்டும்.

ென்டாக் பி.டெக்., உள்ளிட்ட நீட் அல்லாத படிப்புகளுக்கும் விண்ணப்பம் குவிந்துள்ளன. நீட் அல்லாத படிப்புகளில் சேர 15,993 பேர் விண்ணப்பிக்க இ-மெயில் கொடுத்து பதிவு செய்திருந்தனர். இதில் 13,526 பேர் ஆவணங்களை சமர்பித்து விண்ணப்பித்துள்ளனர்.

பிராந்திய ரீதியாக பார்க்கும்போது புதுச்சேரி 11071, பிற மாநிலங்களில் இருந்து 2448, என்.ஆர்.ஐ., 2 என்.ஆர்.ஐ., ஸ்பான்சர்டு 6 பேர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்ப பரீசிலனைக்கு பிறகு மெரிட் லிஸ்ட் வெளியிட சென்டாக் ரெடியாகி உள்ளது.

இருப்பினும், 10 சதவீத இட ஒதுக்கீடு விவாகரத்தில் இன்னும் தெளிவாக முடிவு எடுக்காமல் உள்ளதால் சென்டாக் திட்டமிட்டபடி கவுன்சிலிங்கினை விரைவாக நடத்த முடியுமா என்பதில் சிக்கல் ஏற்பட்டது. நீட் மதிப்பெண் அடிப்படையிலான படிப்புகளில் மட்டும் தற்போது 10 சதவீத இட ஒதுக்கீடு அரசு பள்ளி மாணவர்களுக்கு தரப்படுகிறது.

இந்த 10 சதவீத இடஒதுக்கீடு அனைத்து படிப்புகளிலும் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் அடுத்த கட்ட நகர்வு ஏதும் இல்லை. இதன் காரணமாகவே நீட் அல்லாத படிப்புகளில் விண்ணப்பம் பெற்றும் கூட காலத்தோடு கவுன்சிலிங் நடத்த முடியாத சூழல் நிலவுகிறது.

பொதுவாக இட ஒதுக்கீடு கொள்கை முடிவு என்பதால் கேபினெட்டில் வைத்து பிறகு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஆனால் கடந்த காலங்களில் இட ஒதுக்கீடு விவகாரத்தில் கசப்பான அனுபவமே கிடைத்து.

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்புகளில் முதல் முறையாக 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க காங்., அரசு முடிவு செய்தது. இது தொடர்பாக கவர்னர் கிரண்பேடிக்கும் ஆளும் காங்., கட்சிக்கு இடையே கொள்கை முரண்பாடு ஏற்பட்டபோது, அந்த கோப்பினை மத்திய அரசுக்கு அனுப்பினார். ஆனால், அந்த கோப்பிற்கு அவ்ளவு சீக்கிரத்தில் ஒப்புதல் கிடைக்கவில்லை.

மாநில அரசு கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு திண்டாடியது. மத்திய அரசின் கதவுகளை பல முறை தட்டியபோது ஒருவழியாக அனுமதி கிடைத்து, நீட் படிப்புகளுக்கு அமல்படுத்தி வருகின்றது. இப்போது மற்ற படிப்புகளிலும் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கு மத்திய அரசுக்கு கோப்பு அனுப்பினால், அந்த கசப்பான அனுபவமே கிடைக்கும்.

எனவே, இலவு காத்த கிளிபோல் கோப்பு அனுமதிக்காக காத்திருக்க வேண்டும். இட ஒதுக்கீடு விஷயத்தில் மத்திய அரசிடமிருந்து உடனடியாக பதில் கிடைக்குமா என்பது சந்தேகமே. எனவே அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு விரிவாக்கம் விவகாரத்தில் எப்போது மத்திய அரசு அனுமதி தருவது, எப்போது சென்டாக் கவுன்சிலிங் நடத்தி முடிப்பது என பெற்றோர்கள், கல்வியாளர்கள் எழுப்புகின்றனர்.

இந்த விவகாரத்தில் மாநில அரசு விரைவாக முடிவெடுக்க வேண்டும் அவசியம். மத்திய அரசு ஏற்கனவே அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க அனுமதி அளித்துள்ளதால், விரிவாகத்திற்காக கேபினெட்டில் வைத்து இந்தாண்டு அனைத்து படிப்புகளுக்கும் அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

எவ்வளவு விண்ணப்பம்


நீட் அல்லாத படிப்புகளில் கலை அறிவியல் படிப்பிற்கு 3,227, தொழில் படிப்பிற்கு 6,388 பேர் விண்ணப்பித்துள்ளனர். கலை அறிவியல் தொழில் படிப்புகளுக்கு சேர்த்து 3,911 பேர் விண்ணப்பம் போட்டுள்ளனர். உயிரியல் சார்ந்த படிப்புகளுக்கு 5,200 பேர், பி.பார்ம் படிப்பிற்கு 4,586, அக்ரி 2,673, பி.டெக்., 6,344, சட்டம் 1,469, டி.ஐ.பி., 1,644, டி.ஏ.என்.எம்.,971, பி.வி.ஓ.சி., 1,099 பேர் விண்ணப்பித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us