பிளஸ் 2க்கு பின் எங்கு, என்ன படிக்கலாம்? சென்னையில் தினமலர் - வழிகாட்டி
பிளஸ் 2க்கு பின் எங்கு, என்ன படிக்கலாம்? சென்னையில் தினமலர் - வழிகாட்டி
UPDATED : மார் 27, 2025 12:00 AM
ADDED : மார் 27, 2025 04:02 PM

சென்னை:
பிளஸ் 2க்கு பின் என்ன படிக்கலாம்; எங்கு படிக்கலாம் என்பது குறித்த, தினமலர் நாளிதழ், கோவை ஸ்ரீகிருஷ்ணா கல்வி குழுமம் வழங்கும் வழிகாட்டி என்ற ஆலோசனை நிகழ்ச்சி, மார்ச் 28 முதல் 30ம் தேதிவரை சென்னையில் நடக்க உள்ளது.
இதில், பிளஸ் 2 மாணவர்களுக்கு உயர் கல்வி குறித்து 20க்கும் மேற்பட்ட நிபுணர்கள் ஆலோசனைகளை வழங்குவர். மேலும், 80க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களின் அரங்குகளும் இடம் பெறவுள்ளன.
மூன்று நாட்களும், காலை 10:00 முதல் மாலை, 6:30 மணி வரை நடக்கும் இந்த நிகழ்ச்சியில், கல்வியாளர்கள், மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளிப்பதுடன், புதிய படிப்புகள், அவற்றுக்கான வேலைவாய்ப்புகள் குறித்தும் விளக்குவர்.
கருத்தரங்குகள்
மூன்று நாட்களிலும் நடக்கும் சிறப்பு கருத்தரங்குகளில், நீட், ஜே.இ.இ., நுழைவுத் தேர்வுகளில் சாதிப்பதற்கான டிப்ஸ், ரோபோட்டிக்ஸ் அண்டு ஆட்டோமேஷன், ஓபன் ஏ.ஐ., குவாண்டம் கம்ப்யூட்டிங், ஐ.ஓ.டி., கம்ப்யூட்டிங், கடல்சார் படிப்புகள், மெட்டாவர்ஸ். சி.எஸ்., - ஐ.டி., டேட்டா சயின்ஸ், பிக்டேட்டா. மிஷின் லேர்னிங் உள்ளிட்ட தொழில்சார் படிப்புகளுக்கு விளக்கம் அளிக்கப்படும்.
மேலும், கலை - அறிவியல் மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டிய திறன்கள் பற்றியும், மருத்துவம், துணை மருத்துவ படிப்புகள் குறித்தும், சட்டம், சி.ஏ., படிப்பதால் கிடைக்கும் வாய்ப்புகள் குறித்தும் விளக்கப்படும்.
வாய்ப்பு
புதிய படிப்புகள், வேலைவாய்ப்பு, கல்வி கட்டணம் உள்ளிட்ட விபரங்களை, கல்வியாளர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களிடம் நேரடியாக கேட்கும் வசதி கிடைக்கும். இதன் வாயிலாக, கல்லுாரிகளை தேடி மாணவர்கள், பெற்றோர் அலைவதை தவிர்க்கலாம்.
சிறப்பு விருந்தினர்கள்
நீங்களும் விஞ்ஞானி ஆகலாம் - டாக்டர் வி.டில்லிபாபு, ராணுவ விஞ்ஞானி; டிரோன் தொழில்நுட்பம் - செந்தில் குமார், பேராசிரியர், எம்.ஐ.டி., சென்னை; வருங்காலத்தை ஆளப்போகும் தொழில் நுட்பங்கள் - பரதன் பிரஹலாத், தொழில் துறை வல்லுநர்; நீட், ஜே.இ.இ., தேர்வுகளில் சாதிக்க டிப்ஸ் - அஸ்வின், கல்வி ஆலோசகர்; சி.ஏ., மற்றும் வணிகவியல் - ராஜேந்திர குமார், சி.ஏ., இன்ஸ்டிடியூட் உறுப்பினர்; ஸ்பேஸ் சயின்ஸ் - டாக்டர் ராஜராஜன், ஐ.எஸ்.ஆர்.ஓ., பிரிவு இயக்குநர்.
நிறுவனங்கள் எதிர்பார்க்கும் திறன்கள் - டாக்டர் சங்கர் வேணுகோபால், துணை தலைவர், டெக் இன்னொவேஷன், மஹிந்த்ரா அண்டு மஹிந்த்ரா; இன்ஜினியரிங் துறையில் எதிர்காலம் - ஜெய பிரகாஷ் காந்தி, கல்வி ஆலோசகர்; தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகள் மற்றும் உதவித் தொகைகள் - நெடுஞ்செழியன், கல்வி ஆலோசகர்; உயர்கல்வி வாய்ப்புகள் - சுதா ராமன், ஐ.எப்.எஸ்., ஸ்டேட் பிளானிங் கமிஷன் உறுப்பினர் செயலர்.
கல்விக் கடன் எளிது - விருதாச்சலம், வங்கியாளர்; வேலை வாய்ப்பு திறன்கள் - சார்லஸ் காட்வின், மனிதவள மேம்பாட்டுப் பிரிவு தலைவர், ஜோேஹா. 21ம் நுாற்றாண்டு திறன்கள் - உதயசங்கர், தேசிய தலைவர், நாஸ்காம்; டாக்டர் செந்தில் வேல், டைரக்டர், நேஷ்னல் இன்ஸ்டிடியூட் ஆப் சித்தா, இந்தியன் மெடிசன் / ஹெல்த் சயின்சஸ்.
செந்தில்ராஜா, தொழில்துறை வல்லுநர், இ.வி., லாஜிஸ்டிக்ஸ் அண்டு சப்ளை செயின் மேனேஜ்மென்ட்; உடனடி வேலை வழங்கும் படிப்புகள் - ரமேஷ் பிரபா, கல்வி ஆலோசகர். இந்நிகழ்ச்சிக்கு, பவர்டு பை பங்களிப்பாளராக கோவை ஸ்ரீராமகிருஷ்ணா எஜுகேஷனல் இன்ஸ்டிடியூஷன்ஸ், அமிர்தா விஸ்வ வித்யா பீடம் செயல்படுகிறது.
ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, ஸ்ரீ சக்தி இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அண்டு டெக்னாலஜி, அமெட் பல்கலைக்கழகம், வேல்ஸ் பல்கலைக்கழகம், சிவ்நாடார் பல்கலைக்கழகம் மற்றும் தி இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டட் அக்கவுண்ட்ஸ் ஆப் இந்தியா இணைந்து வழங்குகின்றன.