எந்த கல்லுாரியில் என்ன படிப்பு: பிளஸ் 2 மாணவர்களுக்கு கல்வி சுற்றுலா
எந்த கல்லுாரியில் என்ன படிப்பு: பிளஸ் 2 மாணவர்களுக்கு கல்வி சுற்றுலா
UPDATED : நவ 03, 2026 03:05 PM
ADDED : நவ 03, 2026 03:06 PM
கோவை:
பிளஸ் 2 மாணவர்கள் உயர்கல்வி குறித்து தெரிந்து கொள்ள கல்வி சுற்றுலா சென்றனர். மாவட்ட நிர்வாகம் சார்பில் பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.
செம்மொழி பூங்காவில் கல்வி சுற்றுலா சென்ற பஸ்களை கலெக்டர் பவன்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பிளஸ் 2 படிக்கும் 11,125 மாணவர்கள், விருப்பத்துக்கு ஏற்ப அரசு மற்றும் தனியார் மருத்துவம், பொறியியல், வேளாண்மை, சட்டம், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு நேரடியாக சென்று பார்வையிட உள்ளனர். நவ., 30 வரை நடக்கும் இத்திட்டத்தில் 70க்கு மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் பங்கேற்கின்றனர்.
முதல்நாளான இன்று மருத்துவ கல்லூரிகளுக்கு, 248 மாணவர்களும், வேளாண் கல்லூரிக்கு 60 பேரும், இன்ஜி., கல்லூரிக்கு 60 பேரும், சட்ட கல்லூரிக்கு 45 பேரும், கலை அறிவியல் கல்லூரிகளுக்கு 450 பேரும் அழைத்து செல்லப்பட்டனர்.
சுற்றுலா துவக்க நிகழ்ச்சியில், மாநகராட்சி கமிஷனர் ரவி தேஜா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
மாணவர்கள் கல்லூரி வகுப்பறைகள், ஆய்வகங்கள், நூலகம், விளையாட்டு மைதானங்கள் மற்றும் விடுதிகள் உள்ளிட்டவற்றை பார்வையிடுவர். தனியார் கல்லூரிகளுக்கு செல்லும்போது அந்தந்த கல்லூரி நிர்வாகமே போக்குவரத்து வசதியை செய்து தரும். பிளஸ் 2 முடித்த பிறகு எந்த படிப்பை தேர்வு செய்யலாம், வேலைவாய்ப்புகள், விண்ணப்பிக்கும் முறைகள், 7.5 சதவீத இடஒதுக்கீடு மற்றும் அரசின் சலுகைகளை தெரிந்து கொள்ளலாம்.
- பவன்குமார், கலெக்டர்.
