எந்த துறையை தேர்வு செய்வது; வழிகாட்டியில் கிடைத்தது வழி!
எந்த துறையை தேர்வு செய்வது; வழிகாட்டியில் கிடைத்தது வழி!
UPDATED : மார் 28, 2024 12:00 AM
ADDED : மார் 28, 2024 10:27 AM

கோவை:
கோவையில் நடந்து முடிந்த தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில் கல்ந்து கொண்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
தினமலருக்கு நன்றி
என்னைப்போன்ற கிராமப்புற மாணவர்களுக்கும், உயர்கல்வி படிப்புகள் குறித்து புரிதல் ஏற்படுத்த, வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தும் தினமலர் நாளிதழுக்கு நன்றி. இரு நாட்களாக வருகிறேன். பல தகவல்களை குறிப்பெடுத்துள்ளேன்.
- தக் ஷன்யா, 17, செஞ்சேரிபாளையம்.
மெரைன் படிப்புகள்
மெரைன் சார்ந்து இத்தனை படிப்புகள் இருப்பதே, இங்கு வந்து தான் தெரிந்து கொண்டேன். என்ன படிப்பதென்றே தெரியாமல் குழப்பமாக இருந்தது. நாளையும் நிகழ்ச்சிக்கு வந்த பிறகு, திட்டமிட முடிவு செய்துள்ளேன்.
- மதுமிதா, 17, நீலாம்பூர்.
பிளஸ் 1 பாடப்பிரிவு
என் அக்கா பிளஸ் 2 முடித்திருக்கிறார். நான் தற்போது தான் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுகிறேன். வழிகாட்டி நிகழ்ச்சியில், பிளஸ் 1 வகுப்பில் எந்த துறையை தேர்வு செய்யலாம் என்பதும் தெரிந்து கொண்டேன்.
- அகிலேஷ், 15, கோவை.
வேளாண் படிப்புகள்
வேளாண் பல்கலையின் கீழ் வழங்கும் படிப்புகள், உறுப்பு கல்லுாரி பற்றி விரிவாக விளக்கினர். எப்படி விண்ணப்பிப்பது என்பது முதற்கொண்டு, பல வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டதால், ரிசல்ட் வந்த பிறகு, விண்ணப்பிக்க திட்டமிட்டுள்ளேன்.
- ஸ்னேகா, 17, நீலாம்பூர்.
துறை சார்ந்த தகவல்கள்
பிளஸ் 2 பிறகு என்ன படிப்பதென்றே தெரியாமல், குழப்பமாக இருந்தது. இருநாட்களாக வழிகாட்டி நிகழ்ச்சிக்கு வருவதால், ஓரளவுக்கு அனைத்து துறை சார்ந்தும், அடிப்படை தகவல்கள் தெரிந்து கொண்டேன்.
- சுவிகிறிஸ்டி, 17,
பல்லடம்.
பேரனுக்காக வந்தேன்
நான் தினமலர் நாளிதழின் நீண்டகால வாசகர். என் பேரன் பிளஸ் 2 முடித்திருக்கிறார். வழிகாட்டி நிகழ்ச்சி நடப்பதாக, செய்தித்தாளில் பார்த்ததும், குடும்பத்தோடு வந்துவிட்டோம்.
- வேணுகோபால், 76,
கோவை.
விரிந்திருக்கும் வாய்ப்புகள்
இன்ஜினியரிங் துறையில், இத்தனை படிப்புகள் இருக்கிறதா என்பதே, அரங்கிற்கு வந்த பிறகு தான் தெரிந்தது. சி.ஏ., படிப்புகள் குறித்தும் நிறைய தகவல்கள் தெரிந்து கொண்டேன். மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
- பாரதி, 42,
கோபிசெட்டிபாளையம்.

