200 எதிர்கால டாக்டர்களுக்கு வெள்ளை அங்கி அணிவிப்பு
200 எதிர்கால டாக்டர்களுக்கு வெள்ளை அங்கி அணிவிப்பு
UPDATED : டிச 04, 2024 12:00 AM
ADDED : டிச 04, 2024 03:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:
கோவை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், முதலாமாண்டு மருத்துவ படிப்பில் சேர்ந்த மருத்துவ மாணவர்களுக்கு, வெள்ளை அங்கி அணிவிக்கும் நிகழ்வு நடந்தது. டீன் நிர்மலா தலைமை வகித்து, மாணவர்களுக்கு வெள்ளை அங்கி வழங்கினார்.
இதில் அவர் பேசுகையில், பிற துறைகளை காட்டிலும், மருத்துவ படிப்பு முற்றிலும் மாறுபட்டது. எந்த சூழலிலும், நோயாளிகளுக்கு சேவை செய்ய தயார்நிலையில் இருக்க வேண்டும். எவ்வித பாகுபாடுகளும், வேறுபாடுகளும் நோயாளிகளுக்கு மத்தியில் பார்க்கக் கூடாது. சுய ஒழுக்கத்துடன் செயல்பட வேண்டும், என்றார்.
தொடர்ந்து, மாணவர்கள் நன்னடத்தை உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். எம்.பி.பி.எஸ்., முதலாமாண்டில் சேர்ந்துள்ள, 200 மாணவர்களுக்கு வெள்ளை அங்கி வழங்கப்பட்டது.