தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சிறுவர்களுக்கு எதற்கு பேஸ்புக், இன்ஸ்டா? செக் வைத்த ஆஸி., பிரதமர்

சிறுவர்களுக்கு எதற்கு பேஸ்புக், இன்ஸ்டா? செக் வைத்த ஆஸி., பிரதமர்

சிறுவர்களுக்கு எதற்கு பேஸ்புக், இன்ஸ்டா? செக் வைத்த ஆஸி., பிரதமர்


UPDATED : நவ 07, 2024 12:00 AM

ADDED : நவ 07, 2024 04:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 07, 2024 12:00 AM ADDED : நவ 07, 2024 04:46 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கான்பெரா:
ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களை பார்க்க தடை விதிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்படும் என ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோனி அல்பனீஸ் அறிவித்தார்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சமூகவலைதளங்களை பயன்படுத்துவதில் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள். சமூகவலைதளத்தில் கணக்கு இல்லாதவர்களை காண்பதே அரிது. இந்த சூழலில் ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களை பார்க்க தடை விதிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்படும்' என ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோனி அல்பனீஸ் அறிவித்தார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களை பார்க்க தடை விதிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்படும். இந்த சட்டம் 12 மாதங்களுக்கு பிறகு நடைமுறைக்கு வரும். இந்த ஆண்டு பார்லிமென்டில் சட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

சமூக ஊடகங்கள் குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கின்றன. குழந்தைகள் அதிக நேரத்தை வீணாக செலவு செய்கின்றனர். பெற்றோரின் ஒப்புதலைப் பெற்ற பயனர்களுக்கு விதிவிலக்குகள் இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த ஆண்டு பிரான்ஸ் 15 வயதிற்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்க முன்மொழிந்தது. இருப்பினும் பயனர்கள் பெற்றோரின் ஒப்புதலுடன் தடையைத் தவிர்க்க முடிந்தது.

பல நாடுகள் ஏற்கனவே கடுமையான சட்டத்தின் மூலம் குழந்தைகளின் சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதாக உறுதியளித்துள்ளன. இதனால், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூகவலைதளங்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us