தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஒரு மருத்துவ கல்லுாரியைக் கூட ஏன் துவங்கவில்லை?

ஒரு மருத்துவ கல்லுாரியைக் கூட ஏன் துவங்கவில்லை?

ஒரு மருத்துவ கல்லுாரியைக் கூட ஏன் துவங்கவில்லை?


UPDATED : மார் 27, 2026 03:15 PM

ADDED : மார் 27, 2026 03:17 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 27, 2026 03:15 PM ADDED : மார் 27, 2026 03:17 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நிர்வாக திறன்மையின்மையே காரணம்?


செம்மலை, முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க.,

அ.தி.மு.க., அரசு, 11 மருத்துவ கல்லுாரிகள் துவக்கினாலும், அவற்றில் மருத்துவமனைக்கான கட்டமைப்புகள் முழுமை பெறாமல் இருந்தன. மத்திய அரசு, 60 சதவீத நிதியை விடுவித்து பணி நடந்தாலும், மாநில அரசின் 40 சதவீத நிதி செலவிடப்படாததால், கட்டமைப்பு பணிகளில் தொய்வு இருந்தது.

தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், 11 மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளின் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. அதே போல், மாவட்டந்தோறும் மருத்துவ கல்லுாரி என்ற வகையில், தி.மு.க., ஆட்சியில், தென்காசி, மயிலாடுதுறை, காஞ்சிபுரம், திருப்பத்துார், ராணிப்பேட்டை, பெரம்பலுார் ஆகிய ஆறு மாவட்டங்களில், மருத்துவ கல்லுாரிகள் துவக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக, ஆறு மாவட்டங்களிலும் இடங்கள் தேர்வு செய்யப்பட்டு தயாராக உள்ளன.

இதற்கான நிர்வாக அனுமதி கோரி, பிரதமர், மத்திய சுகாதார அமைச்சரிடம், 10க்கும் மேற்பட்ட முறை நேரில் சென்று வலியுறுத்தி உள்ளோம். பிரதமரை நேரில் சந்திக்கும் போதெல்லாம் முதல்வரும் வலியுறுத்தி உள்ளார்.

இக்கல்லுாரிகள் துவக்க நிலமும், மாநில அரசின் 40 சதவீத நிதியும் தயாராக உள்ளது. மத்திய அரசு நிர்வாக அனுமதி கொடுத்தால், அம்மாவட்டங்களில் விரைந்து மருத்துவ கல்லுாரிகள் துவக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால், மத்திய அரசு தமிழகத்தை தொடர்ந்து அலட்சியப்படுத்தி வருகிறது.

மத்திய அரசு அனுமதி தரவில்லை!

சுப்பிரமணியன், அமைச்சர், தி.மு.க.,

மருத்துவ கல்லுாரிகளை துவங்க, மாநில அரசு வாயிலாக எவ்வித முன்மொழிவும் வைக்காமல், வாய்மொழியாக கேட்டால் கிடைக்காது. அதை பரிசீலித்து அதில் கூடுதல் விபரங்கள் அல்லது விளக்கம் இருந்தால், மாநில அரசிடம் மத்திய அரசு கேட்கும். இவை அனைத்தும் ஆவணங்கள் வாயிலான பணி. இந்த ஐந்தாண்டுகளில் எத்தனை முறை இது போன்று கேட்கப்பட்டதற்கான முன்மொழிவு ஆவணங்கள் அரசிடம் உள்ளன என்பதை, அமைச்சர் சுப்பிரமணியன் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.

எவ்வித ஆவணங்களும் இன்றி, வாய்மொழியாக சென்று கேட்டால் எதுவும் நடக்காது. மத்திய அரசை சண்டைக்கோழி போல் நடத்தினால், மாநில அரசுக்கான திட்டங்களை எப்படி பெற முடியும்? கேரளா, ஆந்திரா, கர்நாடக மாநிலங்கள், முறையாக மத்திய அரசின் நிதியை பெற்று வருகின்றன. இங்கு பா.ஜ., இல்லாத முதல்வர் இருந்தாலும், முறைப்படி கேட்டால் அனைத்தும் கிடைக்கும்.

தமிழக அரசு, நிதியை பலவற்றிற்கு வீண் விரயம் செய்துள்ளது. இதனால், மருத்துவ கல்லுாரி கட்டுமானத்துக்கான 40 சதவீத நிதியை கூட செலவிட முடியாத அளவில் உள்ளது. இது, தி.மு.க., அரசின் நிர்வாக திறமையற்ற தோல்வியை காட்டுகிறது. இதை திசை திருப்ப, மத்திய அரசை குறை கூறுவது ஏற்புடையது இல்லை.

தி.மு.க., ஆட்சியில் ஒரு மருத்துவ கல்லுாரி கூட துவக்க முடியாதது, அரசின் தோல்வி மட்டுமல்ல, இயலாமையையும் காட்டுகிறது.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us