sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

குரூப் - 1 தேர்வு வினாத்தாள் பக்கங்கள் அதிகரிப்பு ஏன்?

/

குரூப் - 1 தேர்வு வினாத்தாள் பக்கங்கள் அதிகரிப்பு ஏன்?

குரூப் - 1 தேர்வு வினாத்தாள் பக்கங்கள் அதிகரிப்பு ஏன்?

குரூப் - 1 தேர்வு வினாத்தாள் பக்கங்கள் அதிகரிப்பு ஏன்?


UPDATED : ஜூன் 16, 2025 12:00 AM

ADDED : ஜூன் 16, 2025 10:52 AM

Google News

UPDATED : ஜூன் 16, 2025 12:00 AM ADDED : ஜூன் 16, 2025 10:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:
குரூப் - 1 தேர்வில் வழங்கப்பட்ட வினாத்தாளில், வழக்கத்தைவிட, 26 பக்கங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டிருந்தன.

துணை கலெக்டர், போலீஸ் டி.எஸ்.பி., வணிக வரி உதவி கமிஷனர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பணியிடங்களுக்கான குரூப் - 1 தேர்வு, தமிழகம் முழுதும் நேற்று நடந்தது. வழக்கமான குரூப் - 1 தேர்வுகளைவிட, இம்முறை வினாத்தாள் பக்கங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து, திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சுரேஷ்குமார் கூறியதாவது:

குரூப் - 1 தேர்வுக்கான வினாத்தாள், 130 பக்கங்களை கொண்டிருக்கும். இம்முறை, 26 பக்கங்கள் வரை அதிகரிக்கப்பட்டு, மொத்தம் 156 பக்க வினாத்தாள் கொடுக்கப்பட்டிருந்தது.

மொத்த கேள்வி எண்ணிக்கை, எப்போதும் போல, 200 தான். கூற்று - காரண கேள்விகள் எண்ணிக்கை அதிகரித்ததே, பக்கங்கள் எண்ணிக்கை அதிகரிப்புக்கு காரணம். வழக்கத்தைவிட, ஐந்து முதல் ஆறு கூற்று, காரண வினாக்கள் கூடுதலாக கேட்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து பயிற்சிகள் பெற்று, வினாவை விரைவாகவும், அதேநேரம் ஆழமாகவும் படித்து உணர்வோரால், கூற்று - காரண வினாக்களுக்கான சரியான பதிலை, குறித்த நேரத்துக்குள் தேர்வு செய்து விடுவர். முதல் முறை தேர்வு எழுதுவோருக்கு இத்தகைய வினாக்கள் சற்று கடினமாக தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில், குரூப் -1 தேர்வு முடிவுகள், இரண்டு மாதத்துக்குள் அறிவிக்கப்படும் என தமிழ்நாடு பணியாளர் தேர்வாணைய தலைவர் எஸ்.கே.பிரபாகர் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us