தனியார் பல்கலை மசோதா ஏன்? அமைச்சர் விஸ்வநாதன் விளக்கம்
தனியார் பல்கலை மசோதா ஏன்? அமைச்சர் விஸ்வநாதன் விளக்கம்
UPDATED : செப் 13, 2026 10:48 AM
ADDED : செப் 13, 2026 10:52 AM

சென்னை:
“தமிழகத்தில் சர்வதேச தரத்திலான பல்கலைகளை உருவாக்குவதற்காக, தனியார் பல்கலை சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது,” என, தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்தார்.
சென்னை, விமான நிலையத்தில், அவர் அளித்த பேட்டி:
கடந்த 2018 மற்றும் 2019ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தனியார் பல்கலை சட்ட மசோதாக்களின் படி, பல்கலை நடத்த, 100 ஏக்கர் நிலம், 50 கோடி ரூபாய் வைப்புத் தொகை அவசியம்.
தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள, புதிய தனியார் பல்கலை சட்ட மசோதாவின் படி, 25 ஏக்கர் நிலம், 25 கோடி ரூபாய் வைப்புத்தொகை போதும் என, தளர்வுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
தமிழகத்திலும் சர்வதேச தரத்தில் பல்கலை தொடங்க உள்ளோம். ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ் தரத்தில், தமிழகத்திலும் கல்வி மையங்கள் ஏற்படுத்த, இந்த சட்ட மசோதா உதவும். சட்டசபையில், உடல் மொழி விவகாரம் குறித்து, முதல்வர் விளக்கம் அளித்துவிட்டார். இது எதிர்க்கட்சிகளால் தவறாக சித்தரிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
