தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு கல்லுாரியில் விளையாட்டு மைதானம் அமைக்கப்படுமா?

அரசு கல்லுாரியில் விளையாட்டு மைதானம் அமைக்கப்படுமா?

அரசு கல்லுாரியில் விளையாட்டு மைதானம் அமைக்கப்படுமா?


UPDATED : நவ 28, 2025 08:15 AM

ADDED : நவ 28, 2025 08:16 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 28, 2025 08:15 AM ADDED : நவ 28, 2025 08:16 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி அரசு கல்லுாரியில் அனைத்து வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

கள்ளக்குறிச்சி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி கடந்த, 2011ம் ஆண்டு துவங்கப்பட்டது. தற்போது, சோமண்டார்குடி கோமுகி ஆற்றின் அருகே இளங்கலை, முதுகலை பாடப் பிரிவுகளுடன் கல்லுாரி இயங்கி வருகிறது.

இங்கு சங்கராபுரம், சின்னசேலம், தியாகதுருகம், ரிஷிவந்தியம், கச்சிராயபாளையம், கல்வராயன்மலை, எலவனாசூர்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 1,500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர்.

இந்த கல்லுாரியில் படிக்கும் மாணவ, மாணவியர் பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்று மாநில, மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று வருகின்றனர்.

இருப்பினும் மாணவர்கள் விளையாடவும், பயிற்சி மேற்கொள்ளவும், இங்கு முறையான விளை யாட்டு மைதானம் இல்லை.

கல்லுாரியில் அனைத்து உபகரணங்கள் கூடிய வகையில் விளையாட்டு மைதானம் இருப்பின், மாணவர்கள் தீவிர பயிற்சிகளுடன் மேலும் பல போட்டிகளில் வெற்றி பெற்று விளையாட்டு துறையில் சாதனை புரிவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

எனவே, மாணவர்களின் விளையாட்டு திறனை ஊக்குவிக்கும் வகை யில், அனைத்து வசதிகளுடன் கூடிய வகையில் மைதானம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us