பெண்கள் தங்கள் அதிகாரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்
பெண்கள் தங்கள் அதிகாரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்
UPDATED : அக் 29, 2024 12:00 AM
ADDED : அக் 29, 2024 10:35 AM

கோவை :
அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமியின் இ.பி.ஜி., அறக்கட்டளை சார்பில், பெண்களை அதிகார மூட்டல், சமூகம் வளர்த்தல் எனும் இ.பி.ஜி., சமூக நவீன அமைப்பு மாநாடு, கோவை எஸ்.என்.ஆர்., அரங்கில் நடந்தது.
முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி வரவேற்றார். மாநாட்டில் வழக்கறிஞர் சுமதி பேசியதாவது:
அதிகாரம் என்பது பெண்களுக்குகொடுக்கப்படுவதுகிடையாது. அதை அவர்களே எடுக்க வேண்டும். கொடுத்து கிடைத்தால் அது அதிகாரம் கிடையாது. தனது அனைத்து விசயங்களையும் சுயமாக மேற்கொள்ள முடியும் என, எந்த பெண் முடிவெடுக்கிறாளோ, அவள் தான் அதிகாரம் பெற்றவள்.
வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களே, நமது எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும். பெண்கள் பல விசயங்களில் தங்களை சமரசம் செய்து கொண்டு, தோல்வி அடைகின்றனர். நிர்பந்தத்தின் பேரில் வாழாமல், விருப்பத்தின் பேரில் வாழ்வது தான் வாழ்க்கை.
இவ்வாறு, அவர் பேசினார்.
பெண்களை அதிகாரமூட்டல் மற்றும் சமூகம் வளரும் என்ற தலைப்பில், நடந்த மாணவர்களுக்கான போட்டியில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
கற்பகம் பல்கலை துணைவேந்தர் ராமசாமி, கோவை சர்தார் வல்லபாய் பட்டேல் ஜவுளி, மேலாண்மை கல்லுாரி இயக்குனர் அல்லிராணி, பாலக்காடு ஐ.ஐ.டி., பதிவாளர் தியாகராஜன், ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைமை செயல் அலுவலர் சுந்தரராமன், ஹாரிசன்ஸ் மலையாளம் பிளான்டேஷன் முன்னாள் செயல் அலுவலர் வெங்கட்ராமன் ஆனந்த் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.