தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/உலகின் இளம் வயது பேராசிரியர்; 306 ஆண்டு கால சாதனை முறியடிப்பு!

உலகின் இளம் வயது பேராசிரியர்; 306 ஆண்டு கால சாதனை முறியடிப்பு!

உலகின் இளம் வயது பேராசிரியர்; 306 ஆண்டு கால சாதனை முறியடிப்பு!


UPDATED : ஆக 05, 2026 10:53 AM

ADDED : ஆக 05, 2026 11:02 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 05, 2026 10:53 AM ADDED : ஆக 05, 2026 11:02 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாஷிங்டன்:
உலகின் மிக இளம் வயது பேராசிரியர் என்று சாதனையை அமெரிக்காவின் புளோரிடாவை சேர்ந்த நாதன் தாமஸ், 18, படைத்துள்ளார். அவர் 306 ஆண்டு கால சாதனை முறியடித்து பலரது கவனத்தை பெற்றார்.

அமெரிக்காவின் புளோரிடாவை சேர்ந்த நாதன் தாமஸ் என்ற இளைஞர், 18 வயது 346 நாட்களில் உலகின் மிக இளைய ஆண் பேராசிரியர் என்ற சாதனையைப் படைத்து, கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். இதன் மூலம், 306 ஆண்டுகளாக முறியடிக்கப்படாமல் இருந்த ஒரு சாதனையை படைத்து இவர் பலரது பாராட்டை பெற்று இருக்கிறார்.

1717ம் ஆண்டு தனது 19வது வயதில் பேராசிரியரான ஸ்காட்லாந்து கணிதவியலாளர் கோலின் மக்லாரின் படைத்த சாதனையை முறியடித்தார். 2008ம் ஆண்டில் 18 வயதில் உலகின் மிக இளம் வயது பெண் பேராசிரியராக சாதனை படைத்த அலியா சாபூரை விட நாதன் தாமஸ் 16 நாட்கள் இளையவர் ஆவார். இருபாலரிலும் உலகின் இளம் பேராசிரியர் என்ற சாதனையை நாதன் தாமஸ் தன்வசப்படுத்தி உள்ளார்.

யார் இந்த நாதன் தாமஸ்?


அமெரிக்காவின் புளோரிடாவை சேர்ந்தவர் நாதன் தாமஸ், இவருக்கு வயது 18.

இவர், மியாமி டேட் கல்லுாரியில் பொறியியல் பயிற்றுவிக்கிறார்.

தனது 10 வயதிலேயே மியாமி டேட் கல்லூரியில் பள்ளிப் படிப்புடன் சேர்த்து கல்லூரிப் படிப்பையும் நாதன் தாமஸ் துவக்கினார்.

14வது வயதில் புளோரிடா சர்வதேசப் பல்கலைக்கழகத்தில் கல்லூரி கால படிப்பை துவக்கினார்.

மின் பொறியியல் துறையில் இளங்கலை மற்றும் முதுகலை ஆகிய இரண்டு பட்டங்களையும் 18 வயதிற்குள் நிறைவு செய்து சாதனை படைத்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us