தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்லுாரி மாணவர்களுக்கு யோகா பயிற்சி துவக்கம்

கல்லுாரி மாணவர்களுக்கு யோகா பயிற்சி துவக்கம்

கல்லுாரி மாணவர்களுக்கு யோகா பயிற்சி துவக்கம்


UPDATED : ஆக 25, 2026 09:43 PM

ADDED : ஆக 25, 2026 09:45 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 25, 2026 09:43 PM ADDED : ஆக 25, 2026 09:45 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வால்பாறை:
அறிவு திருக்கோவில் சார்பில் அரசு கல்லுாரி மாணவர்களுக்கான யோகா பயிற்சி துவங்கியது.

வால்பாறை அரசு கலை அறியவில் கல்லுாரியில், வணிகவியல் துறை மாணவர்களுக்கான யோகா பயிற்சி கல்லுாரி கலையரங்கில் நடந்தது. அறிவு திருக்கோவில் சார்பில் நடைபெற்ற யோகா பயிற்சியை, கல்லுாரி முதல்வர் கோபி துவக்கி வைத்தார். பேராசிரியர் மணிமேகலை வரவேற்றார்.

நிகழ்ச்சியில் அறிவு திருக்கோவில் யோகா பேராசிரியர் சுவாமிநாதன் பேசியதாவது:


படிக்கும் வயதில் தேவையற்ற மன அழுத்தத்தை குறைக்க தியானம் செய்ய வேண்டும். உடலும், உள்ளமும் எப்போதும் புத்துணர்ச்சியுடன் இருக்க நாள் தோறும் யோகா செய்வது அவசியம். யோகா பயிற்சி செய்வதன் வாயிலாக, மனதில் ஏற்படும் தேவையற்ற சிந்தனைகள் பறந்து போய்விடும்.

தியானத்தின் வாயிலாக அனைவரும் இறைவனை காணலாம். யோகா பயிற்சியின் வாயிலாக மனம், அறிவு, ஓழுக்கம் மற்றும் ஆளுமை வளர்ச்சியை மேற்படுத்தும் சக்தி கிடைக்கிறது.

இவ்வாறு, பேசினர்.

நிகழ்ச்சியில், கல்லுாரி பேராசிரியர்கள் கார்த்திகேயன், கிருஷ்ணவேணி மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us