தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ முத்தமிழறிஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

முத்தமிழறிஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

முத்தமிழறிஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்


UPDATED : அக் 12, 2024 12:00 AM

ADDED : அக் 12, 2024 10:54 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 12, 2024 12:00 AM ADDED : அக் 12, 2024 10:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
முத்தமிழறிஞர் கலைஞர் விருது பெற, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழுக்கு தொண்டாற்றும் அறிஞர் ஒருவருக்கு, முத்தமிழறிஞர் கலைஞர் விருது வழங்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இவ்விருது பெறும் அறிஞருக்கு, 10 லட்சம் ரூபாய், 1 சவரன் தங்கப்பதக்கம், பொன்னாடை, தகுதியுரை வழங்கப்படும்.

அடுத்த ஆண்டு திருவள்ளுவர் தினத்தன்று வழங்கப்படும் பல்வேறு விருதுகளுடன், இவ்விருதும் வழங்கப்படும். இவ்விருது பெற, தமிழுக்கு தொண்டு ஆற்றியவர்களிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பங்களை, www.tamilvalarchithurai.tn.gov.in/awards மற்றும் http://awards.tn.gov.in என்ற இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அவற்றை பூர்த்தி செய்து, தமிழ் வளர்ச்சி இயக்குனர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ் சாலை, எழும்பூர், சென்னை - 8 என்ற முகவரிக்கு, தபாலில் வரும் 30ம் தேதிக்குள், தக்க ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us