UPDATED : ஜூன் 06, 2025 12:00 AM
ADDED : ஜூன் 06, 2025 10:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
இளநிலை ஆய்வாளர்களுக்கான உதவித்தொகை பெற, உதவிப் பேராசிரியராக பணியாற்ற, பிஎச்.டி., படிப்பில் சேர, சி.எஸ்.ஐ.ஆர் - யு.ஜி.சி., நெட் தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வு கணினி வழியில், தேசிய தேர்வு முகமையான என்.டி.ஏ., சார்பில், அடுத்த மாதம், 26, 27, 28ம் தேதிகளில், நடைபெற உள்ளது.
இதற்கு வரும், 23ம் தேதிக்குள், https://csirnet.nta.ac.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.