தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கால்நடை மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

கால்நடை மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

கால்நடை மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்


UPDATED : மே 26, 2025 12:00 AM

ADDED : மே 26, 2025 11:17 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 26, 2025 12:00 AM ADDED : மே 26, 2025 11:17 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
பி.வி.எஸ்.சி., ஏ.எச்., உள்ளிட்ட கால்நடை மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு, ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என கால்நடை மருத்துவ பல்கலை பதிவாளர் நரேந்திரபாபு தெரிவித்தார்.

இதுகுறித்து, அவர் கூறியதாவது:

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையின் கீழ், சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி ஆகிய ஏழு இடங்களில், கால்நடை மருத்துவ கல்லுாரிகள் செயல்படுகின்றன.

இக்கல்லுாரிகளில், ஐந்தரை ஆண்டு, பி.வி.எஸ்.சி., ஏ.எச்., கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புகளுக்கு, 660 இடங்கள் உள்ளன. திருவள்ளூர் மாவட்டம் கோடுவெளியில் உள்ள உணவு மற்றும் பால்வள தொழில்நுட்ப கல்லுாரி, ஓசூரில் உள்ள கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மை கல்லுாரி உள்ளிட்டவைகளில், நான்கு ஆண்டு பி.டெக்., இளநிலை உணவு தொழில்நுட்பம், பால்வள தொழில்நுட்பம், கோழியின தொழில்நுட்பம் ஆகிய படிப்புகள் உள்ளன.

இவற்றில், 7.5 சதவீதம் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. பிளஸ் 2வில் கணிதம், வேதியியல், இயற்பியல் மற்றும் உயிரியல் ஆகிய பாடங்களை படித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இப்படிப்புகளில் சேர விரும்புவோர், ஜூன் 20 மாலை 5:00 மணி வரை, https://adm.tanuvas.ac.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us