தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கேட் தேர்வு மதிப்பெண்கள் மூலம் விமானப்படை பணியில் சேரலாம்

கேட் தேர்வு மதிப்பெண்கள் மூலம் விமானப்படை பணியில் சேரலாம்

கேட் தேர்வு மதிப்பெண்கள் மூலம் விமானப்படை பணியில் சேரலாம்


UPDATED : மே 27, 2026 10:23 AM

ADDED : மே 27, 2026 10:25 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 27, 2026 10:23 AM ADDED : மே 27, 2026 10:25 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி:
நம் விமானப் படையின் தொழில்நுட்ப அளவிலான அதிகாரி பணியிடங்களுக்கு, ஐ.ஐ.டி.,க்கள் இணைந்து நடத்தும், 'கேட்' எனப்படும் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம் என, ராணுவ அமைச்சகம் அறிவித்துள்ளது.

விமானப் படையின் தொழில்நுட்ப பிரிவில், போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவற்றின் பராமரிப்பு, பழுது பார்ப்பு மற்றும் தொழில்நுட்ப மேலாண்மைக்கு அதிகாரிகள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

விமான இன்ஜின்கள், மின்சார சுற்றுகள், ரேடார், ஆயுத அமைப்புகள், தகவல் தொடர்பு உபகரணங்கள் போன்றவற்றையும் கண்காணிப்பர். இதற்கு என தனியே விமானப்படை பொது நுழைவு தேர்வு உள்ளது.

தற்போது புதிய திட்டத்தின்படி இளநிலை பொறியியல் படிப்பு முடித்தவர்கள், ஐ.ஐ.டி.,யில் முதுநிலை பொறியியல் படிப்பில் சேருவதற்கான, 'கேட்' நுழைவுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மூலமும் விமானப்படை பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதில் தகுதி வாய்ந்தவர்களுக்கு விமானப்படை தேர்வு வாரியம் அழைப்பு அனுப்பும். நுழைவுத்தேர்வு முழுக்க மெரிட் அடிப்படையில் நடக்கும். இந்த புதிய திட்டம் தகுதியான பொறியியல் பட்டதாரிகளுக்கு விமானப்படையில் சேர்வதற்கான வாய்ப்பை இன்னும் எளிதாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us